ஃபியட் கிரைஸ்ளர் இந்தியா நிறுவனம் வழங்கும் டிரைவ் கூல் கேம்ப் துவக்கம்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம், கோடை காலத்தை ஒட்டி டிரைவ் கூல் கேம்ப் என்ற பிரசாரத்தை (கேம்பெயின்) துவக்கியுள்ளனர்.

ஃபியட் கிரைஸ்ளர் இந்தியா நிறுவனம், தங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த டிரைவ் கூல் கேம்ப் நடவடிக்கை ஃபியட் வாகனங்களுக்காக நடத்தபடுகிறது. இந்த டிரைவ் கூல் கேம்ப்பின் போது, வழங்கபடும் வசதிகளை அனைத்து வாடிக்கையாளர்களும் பெற்று கொள்ளலாம்.

ஃபியட் கிரைஸ்ளர் ஆட்டோமோபைல்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த டிரைவ் கூல் கேம்ப்பின் போது, பல்வேறு பிரத்யேகமான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. இந்த சர்வீஸ் கேம்ப் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஃபியட் டீலர்ஷிப்களிலும் நடத்தபடுகிறது. எல்லா வாடிக்கையாளர்களுக்கும் விசேஷ கவனம் வழங்குவதற்காக நாட்டில் உள்ள 4 பகுதிகளும் பிரித்து வகுக்கபட்டுள்ளது.

இந்தியாவின் எந்த எந்த பகுதிகளில் எப்போது இந்த சர்வீஸ் கேம்ப் நடத்தபடுகிறது என தெரிந்து கொள்வோம்.

(*) தெற்கு பகுதி - ஏப்ரல் 11 - 16, 2016

(*) வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் - ஏப்ரல் 18 - 23, 2016

(*) மேற்கு பகுதி - ஏப்ரல் 25 - 30, 2016

fiat-india-drive-cool-camp-for-summer-season-begins

டிரைவ் கூல் கேம்ப்பின் போது, உதிரி பாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) மீது 10% தள்ளுபடி வழங்கபடுகிறது. மேலும், லேபர் கட்டணத்திலும் குறிப்பிடப்படும் படியான சலுகைகள் வழங்கபடுகிறது.

மேலும், ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா மாடல்களுக்கான ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் 638 ரூபாய் என்ற விலைக்கு கிடைக்கிறது.

ஃபியட் நிறுவனத்தின் டிரைவ் கூல் கேம்ப்பின் போது, இலவச டாப் வாஷ் மற்றும் கார் செக்கப் செய்து தரப்படுகிறது. மேலும், ஃபியட் டிரைவ் கூல் கேம்ப்பின் போது எக்ஸ்குளுஸிவ் விற்பனை சலுகைகளும் (சேல்ஸ் ஆஃபர்) வழங்கபடுகிறது. வாடிக்கையாளர்கள் 35,000 வரையில் அதிகப்படியான சலுகைகளை பெறலாம்.

மேலும், இத்தாலியை மையாமாக கொண்டு இயங்கும் இந்த ஃபியட் கிரைஸ்ளர் ஆட்டோமோபைல்ஸ் நிறுவனம், ஏபரல் 15, 2016 வரை சில மாடல்கள் மீது இலவச இன்சூரன்ஸையும் வழங்குகிறது.

English summary
Fiat Chrysler India is organising a special event for its esteemed customers called as Fiat Drive Cool Campaign. This is being held across India for Fiat vehicles. Ten percent discount is offered on spare parts. A similar discount is given on labour charges. Fiat also offer free insurance on certain models till April 15, 2016. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark