ஃபியட் கார்களுக்கான சர்வீஸ் முகாம்: மார்ச் 9 - மார்ச் 12 வரை நடக்கிறது

Written By:

ஃபியட் க்ரைஸ்ளர் ஆட்டோமொபைல்ஸ் அல்லது எஃப்சிஏ என அழைக்கபடும் கார் உற்பத்தி நிறுவனம், ஃபியட் லாயல்டி கேம்ப் என்ற பெயரில் தேசிய அளவிலான சர்வீஸ் முகாமை நடத்துகிறது.

இந்தியா முழுவதும் பரவலாக நடத்தபடும் இந்த சர்வீஸ் முகாமில், வாடிக்கையாளர்கள் பங்கு கொள்ள கேட்டு கொள்ளபடுகின்றனர். இந்த சர்வீஸ் முகாம், மார்ச் 9 முதல் மார்ச் 12-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

fiat-india-loyalty-camp-held-between-9th-march-to-12th-march

இந்த ஃபியட் லாயல்டி கேம்ப், ஃபியட் நிறுவனத்தின் எக்ஸ்குளூஸிவ் டீலர்ஷிப்களில் நடத்தபடுகிறது. இந்த சர்வீஸ் முகாம் நடத்தபடுவதற்கான முக்கிய காரணமே ஃபியட் கார் சொந்தகாரர்களுக்கு, பிரிமியம் மற்றும் எக்ஸ்குளூஸிவ் அனுபவத்தை வழங்குவது தான் என கூறப்படுகிறது.

எந்த எந்த டீலர்ஷிப்களில் எல்லாம், இந்த ஃபியட் லாயல்டி கேம்ப் நடத்தபடுகிறதோ, அங்கு அருகில் உள்ள வாடிக்கையாளர்களை இந்த டீலர்ஷிப்களே தொடர்பு கொள்கின்றன.

ஃபியட் லாயல்டி கேம்ப்பின் போது, வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. இலவச கார் செக்கப், இலவச மேற்கூரை வாஷ், செய்யபடுகிறது. மேலும் லேபர் மற்றும் உதிரி பாகங்கள் மீது தள்ளுபடி வழங்கபடுகிறது. 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட மாடல்கள் மீது 5% வரையிலான ஸ்பெஷல் தள்ளுபடியும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான மாடல்கள் மீது 15 வரையிலான ஸ்பெஷல் சலுகைகள் வழங்கபடுகிறது.

fiat-india-loyalty-camp-held-between-9-march-12-march

தற்போதைய நிலையில், ஃபியட் நிறுவனம், ஃபியட் புன்ட்டோ ப்யூர், ஃபியட் புன்ட்டோ எவோ, ஃபியட் அவென்ச்சுரா, ஃபியட் லீனியா, ஃபியட் அபார்த் 500, ஃபியட் லீனியா கிளாசிக், ஃபியட் அபார்த் புன்ட்டோ ஆகிய மாடல்களை வழங்கி வருகிறது. இவற்றை தவிர ஃபியட் நிறுவனம், ஏராளமான புதிய மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

English summary
Fiat Chrysler Automobiles or otherwise known as FCA is organising Fiat Loyalty Camp for its esteemed customers. This Fiat Loyalty Camp is conducted at select dealerships all across India from March 9th to March 12th. Free car check-up, free top wash are done for Fiat Cars. Special discounts on labour, and discounts on spare parts are also provided. Customers are informed about these Camps through Dealerships.
Story first published: Wednesday, March 9, 2016, 18:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more