ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப் என்ற மழைக்காலத்திற்கு முந்தைய செக்கப் கேம்ப் துவக்கம்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம், ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப் என்ற பெயரில் மழைக்காலத்திற்கு முந்தைய செக்கப் கேம்ப்பை இந்தியா முழுவதும் நடத்துகிறது.

ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப் ஜூன் 20-ஆம் தேதி (திங்கள்) துவங்கி, ஜூன் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைப்பெற உள்ளது. இது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஃபியட் சர்வீஸ் சென்டர்களிலும் நடைபெறும்.

fiat-india-pre-monsoon-bonanza-checkup-camp-20th-to-26th-june

ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப், முன் எச்சரிக்கை நத்தப்படும் ஒரு நடவடிக்கை ஆகும். மழைக்காலத்தில், தங்கள் வாடிக்கையாளர்கள் எந்த இன்னல்களும் எதிர் கொள்ளாலாமல் இருக்க இந்த சர்வீஸ் கேம்ப்கள் நடத்தப்படுகிறது. பாதுகாப்பான வாகன இயக்கத்திற்கு, அடிப்படையான செக்கப்கள் மேற்கொள்ளப்படும்.

இலவச வாகன செக்கப்கள் இல்லாமல், ஃபியட் இந்தியா நிறுவனம், வேறு சில பிரத்யேகமான ஆதாயங்களையும் வழங்குகிறது.

ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப்பின் போது, வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கபட்ட உதிரி பாகங்கள் மீது 10% தள்ளுபடியும், லேபர் சார்ஜ் மீது 15% தள்ளுபடியும், வேல்யூ ஆட்டட் சர்வீஸ் (மதிப்பு கூட்டப்பட்ட சேவை) மீது 20% தள்ளுபடியும், முழு கார் வாஷ் மீது 50 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப் குறித்து, அங்கீகரிக்க்கபட்ட டீலர்ஷிப்கள், வாடிக்கையாளர்களை டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாகவும், மெயில் மூலாமாகவும் தொடர்பு கொண்டு இதற்கான அழைப்பை வழங்குகின்றனர். மேலும், ஃபியட் இந்தியா நிறுவனம், இந்த ஃபியட் ப்ரீ மான்சூன் செக்கப் குறித்த தகவல்களை தங்களின் அலுவல் ரீதியான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கு மூலமாகாவும் பிரச்சாரம் செய்து வருகிறது.

மேலும், இத்தகைய வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஃபியட் நிறுவனம் உறுதியாக உள்ளது.

English summary
Fiat India is organising Pre-Monsoon Bonanza Camp across India. This service camp begins on June 20 and held till June 26, 2016. It is organised at each and every Fiat service centre pan India. Ten percent discount on selected parts, fifteen percent discount on labour, 20 percent discount on value added services, and 50 percent discount on full car wash are offered. To know more, check here...
Story first published: Sunday, June 19, 2016, 8:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark