பழைய ஃபியட் புன்ட்டோ கார் மீண்டும் விற்பனைக்கு வருகிறது!

Written By:

ஏற்கனவே விற்பனையில் இருந்த முதல் தலைமுறை ஃபியட் புன்ட்டோ கார் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சில நிறுவனங்களின் சில தயாரிப்புகள் அதன் உற்பத்தி காலம் முடிந்த பிறகோ அல்லது பிரதான விற்பனை காலம் முடிந்த பின்னரோ மீண்டும் மறுபிரவேசம் செய்யபடுவது வழக்கம். அந்த வகையில், மறுபிரவேசம் செய்யப்பட உள்ள புன்ட்டோ மாடல் கார் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மறுபிரவேசம் செய்யபடும் ஃபியட் தயாரிப்பு;

மறுபிரவேசம் செய்யபடும் ஃபியட் தயாரிப்பு;

ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் கிராண்ட் புன்ட்டோ காரை மேம்படுத்தி, புன்ட்டோ ஈவோ ஹேட்ச்பேக் என பெயர் சூட்டினர்.

தற்போது, இந்த நிறுவனம் இரு கார்களையும் வாடிக்கையாளர்களுக்கு சேர்த்தபடி விற்க முடிவு செய்துள்ளனர். இந்த மறுபிரவேசம் செய்யபடும் மாடலை, இந்திய சந்தைகளுக்காக புன்ட்டோ ப்யூர் என ஃபியட் இந்தியா நிறுவனம் பெயர் சூட்ட உள்ளது.

தேங்கிய ஸ்டாக்குகள்;

தேங்கிய ஸ்டாக்குகள்;

முதல் தலைமுறை இந்தியா ஃபியட் புன்ட்டோ மறுபிரவேசம் செய்யபடுவதற்கான முக்கிய காரணமே, விற்காமல் தேங்கி போன ஸ்டாக்குகள் தான் என கூறப்படுகிறது.

ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் ஹேட்ச்பேக்-கை மேம்படுத்தியது. இதையடுத்து, மக்கள் புதிய ஹேட்ச்பேக் மாடலை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். இதனால், பழைய மாடல்களின் விற்பனை குறைந்து, அதன் ஸ்டாக்குகள் தேங்க ஆரம்பித்தது.

புன்ட்டோ ப்யூர் என்ற பெயரில் மறுபிரவேசம் செய்யபடுவதன் நோக்கமே, விற்காமல் தேங்கியுள்ள ஸ்டாக்குகளை கிளியர் செய்வது தான் என தெரிகிறது.

ஃபியட் தயாரிப்புகளை பற்றி...

ஃபியட் தயாரிப்புகளை பற்றி...

புன்ட்டோ-வுடன் சேர்த்து, அனைத்து ஃபியட் நிறுவன தயாரிப்புகளும், இத்தாலிய பாரம்பரியம் மற்றும் வலுவான கட்டமைப்பு தரத்திற்காக புகழ் பெற்றவை ஆகும்.

தற்போது, இந்திய சந்தைகளுக்கும், சர்வதேச சந்தைகளுக்கும் விற்கபடும், ஃபியட் தயாரிப்புகளின் முனைகள் கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது போல் மாற்றி வடிவமைக்கபட்டு வழங்கபடுகிறது.

முதல் தலைமுறை இந்தியா புன்ட்டோ டிசைன் நுட்பமாகவும், மென்மையாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த புதிய புன்ட்டோ வாடிக்கையாளர்களை ஈர்ர்கும் வகையில், ஆக்கிரோஷமான மற்றும் ஸ்போர்டியான தோற்றம் கொண்டுள்ளது.

புன்ட்டோ ப்யூர் இஞ்ஜின்;

புன்ட்டோ ப்யூர் இஞ்ஜின்;

புன்ட்டோ ப்யூர், 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த 2 வகையிலான இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

புன்ட்டோ ப்யூர் அனேகமாக 3 வேரியண்ட்களில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த வேரியண்ட்கள் ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் என பெயரிடபட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

விலை குறைப்பு?

விலை குறைப்பு?

முந்தைய தலைமுறை புன்ட்டோ கடைசியாக 2014-ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யபட்டது. இதனால், இவை அதிரடியான விலை குறைப்புடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும், புன்ட்டோ ஈவோ போன்றே, இந்த புண்டோ ப்யூர் காரின் இண்டீரியர் அமைப்புகளிலும் மேம்பாடுகள் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
Fiat India is planning for the Comeback for the First Generation Punto. Initially, Grande Punto was updated and presented as Punto Evo hatchback by Fiat India. At present, the manufacturer is planning to sell both the models to its customers side by side. Comeback making model is would be named Punto Pure in the Indian market.
Story first published: Tuesday, January 5, 2016, 17:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark