ஃபியட் லீனியா 125 எஸ் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஃபியட் நிறுவனம் வழங்கும் ஃபியட் லீனியா 125 எஸ் செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபியட் லீனியா 125 எஸ்...

ஃபியட் லீனியா 125 எஸ்...

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் எஃப்சிஏ அல்லது ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமோபைல்ஸ் என அழைக்கப்படும் ஃபியட் நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் தான், இந்நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கப்படும் மாடல்களில் மிகவும் திறன்மிக்க மாடலாக உள்ளது. இது முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 4-சிலிண்டர்கள் உடைய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 5,000 ஆர்பிஎம்களில் 123 பிஹெச்பியையும், 2,100 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 210 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடானின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 500 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

இதன் கிளாஸ் வாகனங்களில், ஃபியட் லீனியா 125 எஸ் செடான் தான் 190 மில்லிமீட்டர் என்ற சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், டியூவல் ஸ்டேஜ் ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடைய எபீஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

ஃபியட் லீனியா 125 எஸ் செடானில், நேவிகேஷன் வசதி உடைய 5-இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 16-இஞ்ச் அல்லாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், சிங்கிள்-டச் பவர் விண்டோஸ், ரியர் சன் கர்டெயின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

டிசைன்;

டிசைன்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் மாடளுக்கும், வழக்கமான லீனியா மாடளுக்குமான வித்தியாசம் இதன் கிரில்லில் தான் உள்ளது.

இதன் கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள் மற்றும் ஹாரிசாண்டல் ஸ்லாட்கள் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு ஏர் டேம் பகுதியிலும் காணப்படுகிறது.

சிறப்பு சலுகை;

சிறப்பு சலுகை;

ஃபியட் நிறுவனம், ஃபியட் லீனியா 125 எஸ் செடான் கார் மீது, ஒவ்வொரு 15,000 கிலோமீட்டர் இடைவேளைக்கும், 3 வருடங்கள் அல்லது 100,000 கிலோமீட்டர் என்ற அளவிற்கு வாரன்டியை வழங்குகிறது.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் அறிமுகம் குறித்து, எஃப்சிஏ இந்தியாவின் பிரெசிடென்ட் மற்றும் மேனேஜிங் டைரக்டரான கெவின் ஃப்லின் மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

"ஃபியட் கார்கள், அவற்றின் செயல்திறனுக்கு புகழ்பெற்றவை. நல்ல டிசைன் உள்ளதோடு மட்டுமல்லாமல், நாங்கள் கார் பிரியர்களுக்காகவே கார்களை வடிவமைக்கிறோம்.

செயல்திறனோடு மட்டுமல்லாமல் எங்கள் கார்கள் நல்ல மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள், வெறும் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், பயணங்களை இனிமையானதாகவும் மாற்ற உதவுகின்றன" என கெவின் ஃப்லின் தெரிவித்தார்.

போட்டி;

போட்டி;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் காருக்கு, தற்போதைய நிலையில் எந்த காரும் போட்டியாக இல்லை.

இதன் ரேஞ்ச்சில், ஃபியட் லீனியா 125 எஸ் செடான் தான் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக உள்ளது.

விலை;

விலை;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 7.82 லட்சம் ரூபாய் என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் லீனியா 125 எஸ் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

ஃபியட் லீனியா தொடர்புடைய செய்திகள்

லீனியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

ஃபியட் லீனியா 125 எஸ் செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Italian carmaker Fiat has launched their most powerful version of its Fiat Linea S Sedan in India, which is called as the Fiat Linea 125 S. Linea 125 S made its debut in India at 2016 Delhi Auto Expo. Fiat is offering three years/ 100,000km comprehensive warranty with service intervals popping up every 15,000km. To know more about Fiat Linea 125 S Sedan, check here...
Story first published: Friday, July 8, 2016, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X