பவர்டெக் இஞ்ஜினுடன் ஃபியட் புன்ட்டோ எவோ, அவென்ச்சுரா அறிமுகம்

Written By:

ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் ஃபியட் புன்ட்டோ எவோ மாடலுக்கு கூடுதல் திறன்மிக்க டீசல் இஞ்ஜினையும், ஃபியட் அவென்ச்சுரா மாடலுக்கு ரீ-டியூனிங் செய்யப்பட்ட இஞ்ஜினையும் பொருத்தி வழங்கியுள்ளனர்.

ஃபியட் நிறுவனம் செய்துள்ள இந்த மேம்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பவர்டெக்;

பவர்டெக்;

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஃபியட் நிறுவனம், பவர்டெக் என்ற பிராண்டிங் கொண்ட மறு டியூனிங் செய்யப்பட்ட புதிய இஞ்ஜின் உடன், ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் அவென்ச்சுரா மாடல்களை மேம்படுத்தி வழங்குகின்றனர்.

இது, தற்போது உபயோகிக்கப்படும் டீசல் இஞ்ஜினின், கூடுதல் திறன் கூட்டப்பட்ட வடிவம் ஆகும்.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

இந்த புதிய பவர்டெக் இஞ்ஜின், 92 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

எனினும், ஃபியட் புன்ட்டோ எவோ-வின் பழைய இஞ்ஜின் 75 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

கூட்டப்பட்ட இஞ்ஜின் திறன்;

கூட்டப்பட்ட இஞ்ஜின் திறன்;

பவர்டெக் பிராண்டிங் உடனான ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் அவென்ச்சுரா மாடலுக்கு, விஜிடி எனப்படும் வேரியபிள் ஜியாமெட்ரி டர்போ (VGT (Variable Geometry Turbo)) உடைய 1.3 லிட்டர் லிட்டர் மல்டிஜெட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 92 பிஹெச்பியையும், 200 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்த ஃபியட் மாடல்களில் பொருத்தபட்டுள்ள இஞ்ஜின், அதே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பெட்ரோல் மாடல்கள்;

பெட்ரோல் மாடல்கள்;

ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் அவென்ச்சுரா மாடல்களில் உள்ள 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் இன்ஜ்ஜிங்களின் விவரகுரிப்புகளில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் அவென்ச்சுரா மாடல்களில், இஞ்ஜின் மேம்பாடுகளை தவிர, இந்த 2 மாடல்களிலும், ஃபியட் நிறுவனம் புதிய 5-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், மேப்மைஇந்தியா நேவிகேஷன் வசதியும் உள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

புதிய பவர்டெக் ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் அவென்ச்சுரா, ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கும்.

லீனியா 125 எஸ்;

லீனியா 125 எஸ்;

ஃபியட் நிறுவனம், சமீபத்தில் தான் தங்களின் கூடுதல் கூடுதல் திறன்மிக்க ஃபியட் லீனியா 125 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

விலை;

விலை;

ஃபியட் புன்ட்டோ எவோ பவர்டெக் மாடல், 6.81 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா பவர்டெக் மாடல், 7.87 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அவென்ச்சுரா தொடர்புடைய செய்திகள்

புன்ட்டோ எவோ தொடர்புடைய செய்திகள்

ஃபியட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Fiat India launched powerful diesel engine called the PowerTech Engine for Punto Evo and retuned engine for Avventura. These models comes with PowerTech branding which is retuned version of current diesel engine. New Fiat PowerTech Punto Evo and Avventura range will come in three variants of Active, Dynamic, and Emotion. To know more, check here...
Story first published: Saturday, July 9, 2016, 17:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark