ஃபியட் நிறுவனத்தின் அபார்த் புன்ட்டோ, அவென்ச்சுரா மாடல்களின் உற்பத்தி நிறுத்தம்

Written By:

ஃபியட் நிறுவனம், தாங்கள் வழங்கும் அபார்த் புன்ட்டோ மற்றும் அவென்ச்சுரா ஆகிய மாடல்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஃபியட் நிறுவனம், தங்களின் கார்களை தயாரிக்க மஹாராஷ்டிராவில் பூனே அருகே ரஞ்ஜன்காவ்ன் என்ற இடத்தில் உற்பத்தி ஆலை கொண்டுள்ளனர். இங்கு தான், ஃபியட் நிறுவனத்தின் அபார்த் புன்ட்டோ மற்றும் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் ஆகிய மாடல்களையும் தயாரிக்கின்றனர். இந்த உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தி வைக்கபடுகிறது.

ரஷ்லேன் நிறுவனம் மூலம் வெளியான செய்திகள் படி, இந்த உற்பத்தியை நிறுத்தும் நடவடிக்கை, வரவிருக்கும் ஜீப் சி-எஸ்யூவியின் உற்பத்திக்காக மேற்கொள்ளபடுகிறது.

fiat-suspends-production-of-abarth-punto-and-avventura-in-pune

ஜீப் சி-எஸ்யூவி, வரும் நவம்பரில் நிகழ உள்ள சா பாலோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஜீப் சி-எஸ்யூவி, பிரேசில் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யபட உள்ளது.

இந்த ஜீப் சி-எஸ்யூவியின் உற்பத்திக்காக, ரஞ்ஜன்காவ்ன் உற்பத்தி ஆலையில், 280 மில்லியன் டாலர்களை ஃபியட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஜீப் சி-எஸ்யூவிக்கு 2.0 லிட்டர் மல்டிஜெட் 2 டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரஞ்ஜன்காவ்ன் உற்பத்தி ஆலையில் இருந்து, ஜீப் சி-எஸ்யூவி 2017 இறுதி அல்லது 2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.

English summary
Fiat temporarily suspend production of their Abarth Punto hot hatch and Avventura crossover. According to Rushlane, Fiat is stopping production of their Abarth Punto and Avventura at its Ranjangaon factory near Pune. This is done for preparing for their upcoming Jeep C-SUV. Fiat has $280 million on production of Jeep C-SUV. To know more, check here...
Story first published: Saturday, April 2, 2016, 18:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark