விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் 5 புதிய கார் பிராண்டுகள்!

Written By:

இந்தியாவில் பட்ஜெட் கார் முதல் பகட்டான கார்கள் வரையிலான செக்மென்ட் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் கார் நிறுவனங்கள் பல புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் நிலையில், பல புதிய கார் நிறுவனங்களும் இந்தியாவில் கால் பதிக்க கங்கணம் கட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலும் ஏற்கனவே உள்ள தாய் நிறுவனங்கள், இங்குள்ள வர்த்தக வாய்ப்பை பார்த்து தங்களது துணை பிராண்டுகளுக்கும் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அவற்றையும் களம் புக ஆயத்தப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் விரைவில் கால் பதிக்கும் என எதிர்பார்க்கப்படும் 5 பிரபல கார் பிராண்டுகளின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டைகட்சூ

01. டைகட்சூ

டொயோட்டா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டைகட்சூ பிராண்டு விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தோனேஷியாவில் டைகட்சூ கார்களை டொயோட்டா அறிமுகம் செய்துவிட்ட நிலையில், அடுத்து இந்தியாவை குறி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. டைகட்சூ பிராண்டின் மிக குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் நிச்சயம் ஆல்ட்டோ, க்விட் கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.

02. கியா மோட்டார்ஸ்

02. கியா மோட்டார்ஸ்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த கியா கார் பிராண்டு. ஏற்கனவே, சில கியா கார்கள் சென்னையில் வைத்து சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், கியா பிராண்டை விரைவில் களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன. இது நிச்சயமாக பட்ஜெட் மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

03. லெக்சஸ்

03. லெக்சஸ்

டொயோட்டா கார் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டுதான் லெக்சஸ். ஏற்கனவே, லெக்சஸ் பிராண்டை களமிறக்குவதற்கான ஆய்வுப் பணிகளை டொயோட்டா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் மார்க்கெட் நிலை சாதகமாக மாறும்போது உடனடியாக லெக்சஸ் சொகுசு கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும், தனி ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது. ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய ஜெர்மன் மும்மூர்த்திகளுக்கு போட்டியாக இருக்கும்.

 04. அக்யூரா

04. அக்யூரா

லெக்சஸ் எப்படி டொயோட்டாவின் சொகுசு பிராண்டாக இருக்கிறதோ, அதேபோன்று, ஹோண்டா கார் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டுதான் அக்யூரா. பல நாடுகளில் இந்த பிராண்டுக்கு நல்ல வரவேற்பும், பிரபலமும் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா பிராண்டு கார்களுக்கு இருக்கும் நன்மதிப்பை வைத்து, அக்யூரா பிராண்டையும் பிரபலப்படுத்தும் திட்டம் இருக்கிறது. மேலும், அக்யூரா பிராண்டுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் ஹோண்டா கருதுகிறது.

05. ஜெனிசிஸ்

05. ஜெனிசிஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டுதான் ஜெனிசிஸ். அடுத்த சில ஆண்டுகளில் ஜெனிசிஸ் பிராண்டின் உயர் வகை சொகுசு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் ஜெனிசிஸ் கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

 
English summary
Here are five car brands that may soon come to India.
Story first published: Thursday, June 2, 2016, 11:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark