இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஃபிகோ கார் ஏற்றுமதியை துவங்கியது ஃபோர்டு !

By Meena

அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சனந்த் என்ற பகுதியில் அந்நிறுவனத்துக்கு உற்பத்தி ஆலை உள்ளது. உள்ளூர் மார்க்கெட் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும் இங்குதான் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து சுமார் 40 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது ஃபோர்டு நிறுவனம். உள்ளூர் மார்க்கெட்டில் ஃபோர்டு ஃபிகோ மாடல் அனைவராலும் அறியப்பட்டதுதான்.

ஃபோர்டு ஃபிகோ கார்

அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை மாடலை கேஏ பிளஸ் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது அந்நிறுவனம். ஃபோர்டு கார்கள் லோக்கல் மார்க்கெட்டில் விற்பனையாவதைக் காட்டிலும் ஏற்றுமதி செய்யப்படும் அளவு அதிகம். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 10,285 கார்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது ஃபோர்டு. இது, அந்நிறுவனத்தின் ஏற்றுமதி செயல்பாட்டில் 198 சதவீத வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு அனுப்பும் கார்களில் தெறி காட்டும் ஃபோர்டுக்கு உள்ளூரில் அந்த அளவுக்கு மவுசு இல்லை. இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் ஃபிகோ மாடலின் விற்பனை பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதையடுத்து உள்ளூர் விற்பனைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாம் ஃபோர்டு நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடல் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாடுகளில் கேஏ பிளஸ் மாடலின் விலை 9,990 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.46 லட்சமாகும்.

அண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து வந்த பிரிட்டனில் ஃபிகோ கேஏ பிளஸ் 8,990 பவுண்ட் ஸ்டெர்லிங்காக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.96 லட்சம்) உள்ளது.

இதுதொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு செயல் இயக்குநர் அனுராக் மெக்ரோத்ரா கூறுகையில், குஜராத்தின் சனந்த் தொழிற்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கே ஏ பிளஸ் மாடலை ஏற்றுமதி செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன என்றார்.

ஏற்றுமதியில் ஃபோர்டு நிறுவனம் அடைந்துள்ள வளர்ச்சி பாராட்டுக்குரியதுதான். அதேவேளையில், அதற்கு நிகரான அளவுக்கு, உள்ளூரிலும் ஃபிகோ மாடலின் விற்பனை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஃபோர்டு?

Most Read Articles
English summary
Ford Begins Export Of Figo To Europe Under The Badge KA+.
Story first published: Monday, August 8, 2016, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X