ஸ்டீயரிங், பிரேக் பெடல் இல்லாத தானியங்கி கார்களை தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்...

By Meena

மந்திர தந்திரக் கதைகளில் எல்லாம், பறக்கும் கம்பளம் என்ற ஒன்று வரும். ஏறி அமர்ந்தால் போதும்... சும்மா ஜிவ்வென ஊர் முழுக்க சுற்றி வரும். பால்ய காலங்களில் அதன் மேல் அம்பாரி போக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான குழந்தைகளின் லட்சியமாகவே இருந்தது. காலம் மாற மாற அதன் அடுத்தகட்ட டெக்னாலஜிகள் கதைகளில் வந்தன. அதில் ஒன்றுதான் ஜே.டி.ரௌலிங்கின் ஹாரிபாட்டர். அந்த சூப்பர் ஹீரோ துடைப்பத்தின் மேல் ஏறி அமர்ந்தால், சிவகாசி ராக்கெட் போல அது சீறிப் பாயும்.

இப்படியாக கதைகளில் மட்டுமே கேட்டு வந்த தானாக செல்லும் வாகனங்கள் (!) நிஜத்தில் வந்தால் எப்படியிருக்கும்? அதற்காக கம்பளத்தையோ, துடைப்பத்தையோ கற்பனை செய்து கொள்ளாதீர்கள்..

தானியங்கி கார்

கார்தான்... முழுக்க, முழுக்க தானியங்கி வசதிகளுடன் ஸ்டீயரிங் இல்லாமல், பிரேக் இல்லாமல், ஏக்ஸலேட்டர் இல்லாமல் ஆட்டோமேடிக்காக இயங்கும் வகையில் வந்தால் நன்றாகத்தானே இருக்கும்.

அப்படி ஒரு டெக்னாலஜியில்த செல்ஃப் - டிரைவிங் கார்களை வடிவமைத்து வருகிறது ஃபோர்டு நிறுவனம். அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு, ஆட்டோமொபைல் உலகில் பல புதுமைகளை ஏற்கெனவே புகுத்தியுள்ளது. அந்த வரிசையில் அடுத்தகட்ட முயற்சியாக இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

தானியங்கி வாகனங்களிலேயே 4-ஆம் நிலையிலான மாடல்களாக இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. அதாவது ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் பெடல் ஆகியவற்றின் தேவை இல்லாமல், பொத்தான்களின் (பட்டன்கள்) கட்டுப்பாடுகளிலேயே இயங்கும் வசதியில் இந்த மாடல்களை வடிவமைத்து வருகிறது ஃபோர்டு நிறுவனம்.

இதுகுறித்து அதன் தலைவர் மார்க் ஃபீல்ட்ஸ் கூறுகையில், சாதாரண கார் நிறுவனமாக செயல்பாடமல், அடுத்தகட்ட போக்குவரத்து சேவைகளை உருவாக்கும் நிறுவனமாக ஃபோர்டு இயங்கி வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2021-இல் ஃபோர்டு நான்காம் நிலை தானியங்கி கார்கள் மார்க்கெட்டுக்கு வந்து வித்தைக் காட்டப் போகின்றன. அதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.

இதுமட்டுமின்றி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சிலிகான் வேலி பகுதியில் உள்ள ஃபோர்டு நிறுவன கிளையில் பணியாளர்களை 300-ஆக அதிகரிக்கவும், புதிய அலுவலகங்களைத் திறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

ஆகமொத்தத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் புதியதொரு அத்தியாயத்தைப் படைக்கக் காத்திருக்கிறது ஃபோர்டு.

Most Read Articles
English summary
Ford Developing Cars Without A Steering Wheel Or Pedals.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X