ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் நிறைகளும், குறைகளும்... ஒரு அலசல்!

Written By: Krishna

ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய கார்களில் மக்கள் ஆதரவை அதிகம் பெற்றுள்ள மாடல் ஈக்கோஸ்போர்ட். காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலான அந்தக் கார் விற்பனையிலும் பெஸ்டாகவே உள்ளது. வாடிக்கையாளர் மத்தியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால் மற்ற போட்டி கார்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு படிப்படியாக முன்னேறி வருகிறது ஈக்கோஸ்போர்ட்.

இருந்தாலும், அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய வேண்டாமா? இதோ அதற்கு வழிகாட்டுகிறது டிரைவ் ஸ்பார்க்... ஈக்கோஸ்போர்ட்டை பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

நிறைகள்... - தோற்றம்;

நிறைகள்... - தோற்றம்;

முதலில் லுக்... மற்ற மாடலைக் காட்டிலும் வித்தியசாமான ஸ்போர்ட்டி வடிவமைப்பில் இருப்பது இதன் பிளஸ். அடுத்ததாக ஈக்கோஸ்போர்ட்டின் வண்ணங்களும் வாடிக்கையாளர்களை ஈர்த்த சிறப்பம்சங்களில் ஒன்று.

டிசைன்;

டிசைன்;

நம்ம ஊர் சாலைகளின் நிலை அறிந்து டிசைன் செய்யப்பட்டதால் பள்ளம், மேடு, வேகத் தடை, குறுகிய சாலை என அனைத்து மூலை முடுக்குகளிலும் அசால்ட்டாக நுழைந்து விடும் இந்த மாடல்.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு அம்சங்கள் என எடுத்துக் கொண்டால், ஈக்கோஸ்போர்ட்டில் மொத்தம் 6 ஏர் பேக்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆண்ட்டி லாக் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியவையும் உள்ளன. மலைச் சரிவான பகுதிகளில் பாதுகாப்பாக பயணிக்க வல்ல தொழில்நுட்பம், அவசர கால தொலைபேசி வசதி, அவசர கால பிரேக் முன்னெச்சரிக்கை உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த மாடலில் உள்ளன.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ரிமோட் சாவி, பார்க்கிங் கேமரா, லெதர் சீட்கள், பின் இருக்கையில் சார்ஜர் வசதி உள்ளிட்டவை ஈக்கோஸ்போர்ட்டின் ஹைலைட்டான விஷயங்கள்.

1.0 லிட்டர் ஈகோ பூஸ்ட் இஞ்சின்...

1.0 லிட்டர் ஈகோ பூஸ்ட் இஞ்சின்...

எஞ்சின் திறனைப் பொருத்தவரை மூன்று வகையான எஞ்சின்களில் இந்த மாடல் அறிமுகமாகியுள்ளது. 1.0 லிட்டர் ஈகோ பூஸ்ட் எஞ்சினானது, 123 பிஎச்பி முறுக்கு விசையையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 5 மேனுவல் கியர்கள் இதில் உள்ளன.

1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின்...

1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின்...

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 110 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5 மேனுவல் கியர்கள் மற்றும் 6 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் உள்ளன.

1.5 லிட்டர் டீசல் இஞ்சின்...

1.5 லிட்டர் டீசல் இஞ்சின்...

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 5 மேனுவல் கியர்கள் உள்ளன. அந்த எஞ்சினானது 99 பிஎச்பி மற்றும் 205 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

குறைகள்... - தோற்றம்;

குறைகள்... - தோற்றம்;

குறைபாடுகள் எனக் கூறினால், அதிலும் முதலில் வருவது அதன் லுக்தான். எஸ்யூவி மாடல்கள் படு பிரம்மாண்டாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், ஈக்கோஸ்போர்ட்டைப் பொருத்தவரை பார்க்க சற்று சிறிய வாகனம் போல தோன்றுவது சிலருக்கு அதிருப்தியை உருவாக்கலாம்.

இஞ்சின்;

இஞ்சின்;

பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டுள்ள ஈகோ பூஸ்ட் எஞ்சின் சிறப்பானதுதான். அதேவேளையில், டீசல் மாடலைப் பொருத்தவரை, உயர் திறன் கொண்ட எஞ்சின்கள் வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு.

டிசைன்;

டிசைன்;

முகப்பு கண்ணாடியையும் (விண்ட் ஷீல்டு), சைடு கண்ணாடியையும் இணைக்கும் பகுதி ஏ - பில்லர் எனப்படுகிறது. அந்த டிசைன் கொஞ்சம் தடிமனாகக் கொடுக்கப்பட்டிருப்பது காருக்குள் இருந்து பார்க்கும்போது சாலையின் வியூவை சற்றே சிறிதாக்குகிறது.

பின் இருக்கை இட வசதி;

பின் இருக்கை இட வசதி;

இதற்கு அடுத்து குறைகள் எனப் பார்த்தால், ஈக்கோஸ்போர்ட் காரின் பின் இருக்கையில் இருவர் மட்டுமே சௌகரியமாக அமர்ந்து செல்ல முடியும். மூன்றாவது நபர் அமர்ந்தால் அது இடைஞ்சலாகவே இருக்கும். எனவே, பின்இருக்கை இடவசதி இந்த மாடலில் உள்ள குறைகளில் ஒன்று.

அமரும் வசதி;

அமரும் வசதி;

ஈக்கோஸ்போர்ட்டின் டைட்டானியம் (ஓ) மாடலில் பாதுகாப்புக்காக 6 ஏர் பேக்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் காரில் அமர்ந்திருப்பவர்கள் பிடித்துக் கொள்ள கைப் பிடிகள் எதுவும் இல்லை. இந்திய சாலைகள் உள்ள நிலைமையில் அத்தகைய வசதிகள் ஈக்கோஸ்போர்ட்டில் இல்லாததது அதிருப்திக்குரிய விஷயம்தான்.

பூட்ஸ்பேஸ்;

பூட்ஸ்பேஸ்;

உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான பூட்ஸ்பேஸ் வசதி 362 லிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் இது மிகவும் குறைவு. இவையெல்லாம் ஈக்கோஸ்போர்ட்டில் உள்ள சில குறைபாடுகள்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி மக்கள் மனம் கவர்ந்த மாடலாகவே வலம் வருகிறது ஈக்கோஸ்போர்ட்... விரைவில் விற்பனையில் புதிய சகாப்தம் படைக்கத் திட்டமிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம்... பார்க்கலாம் அதன் ஆசை கைகூடுமா என்று....

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம் - முழு விவரங்கள்

விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஓவர்டேக் செய்த மஹிந்திரா டியூவி 300: ஒப்பீடு!

ஈக்கோஸ்போர்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Ford is known for its build quality and drivability, launched their EcoSport in India to tackle some of the trickiest road conditions in India. Car manufacturer will tell how hard Indian customer are with kind of demand, for price they pay for an automobile. Here are some of the pros and cons of Ford EcoSport. Take a look at some of not so good and good aspects. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more