பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம் - முழு விவரங்கள்

By Ravichandran

பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சமீபத்தில் தான் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டது.

கொஞ்ச காலமாகவே, இந்திய வாகன சந்தைகளில், காம்பேக்ட் எஸ்யூவிகளின் அறுமுகங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஃபோர்டு நிறுவனம் தங்களின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு பொலிவை கூட்டியுள்ளது.

பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரியுமா?

வாருங்கள், இது குறித்த தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேம்படுத்தபட்ட இஞ்ஜின்;

மேம்படுத்தபட்ட இஞ்ஜின்;

முக்கியமான விஷயமாக, பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இஞ்ஜின் பவர் அதிகரிக்கபட்டுள்ளது. மேம்படுத்தபட்ட இஞ்ஜினின் பவர் 99 பிஹெச்பியாக உள்ளது. இது முந்தைய வடிவில், 90 பிஹெச்பியாக இருந்தது. தற்போது, 9 பிஹெச்பி பவர் கூட்டபட்டுள்ளது.

இதே போல், இதன் 1.5 லிட்டர் இஞ்ஜின் தற்போது 1750-3250 ஆர்பிஎம்களில் 205 என்எம் வெளிபடுத்தும் வகையில் மேம்படுத்தபட்டுள்ளது. பழைய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 2000-2750 ஆர்பிஎம்களில் 204 என்எம் வெளிபடுத்தும் வகையில் இருந்தது. பழைய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஒப்பிடுகையில், பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிக திறன் வெளிபடுத்தும் வகையில் உள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் வெளிபுறத்தில், டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் லைட் கைட்கள் சேர்க்கபட்டுள்ளது.

மற்றபடி அமைப்புரீதியாக, புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. வலது ஃபாக் லேம்ப் மீது இருந்த வைட் ரிவர்ஸ் லைட் ஆனது,

ரெட் ரிவர்ஸ் லைட் கொண்டு மாற்றபட்டுள்ளது. எனினும் இந்த வைட் ரிவர்ஸ் லைட், இடது ஃபாக் லேம்ப் மீது காணப்படுகிறது.

டெயில்கேட்;

டெயில்கேட்;

பொலிவு கூட்டபட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் டெயில்கேட் டோரின் ஹேண்டில், டோர் அன்லாக் செய்யும் வகையிலான சென்ஸார் கொண்டிருந்தது. இது கண்ணுக்கு தெரிய கூடிய பட்டனாக இருந்தது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில், ரப்பர் கோட்டிங் செய்யபட்ட பல்ப் உடைய குரோம் ஹேண்டிலின் கீழே மிக புத்திசாலித்தனமாக பொருத்தபட்டுள்ளது.

ஸ்டால்க், டர்ன் இண்டிகேட்டர்;

ஸ்டால்க், டர்ன் இண்டிகேட்டர்;

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஸ்டால்க் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் முக்கியமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

முன்னதாக, டர்ன் இண்டிகேட்டர் வலது புறத்திலும், லைட்கள் இடது புறத்தில் இருந்தது. தற்போது, இந்தியாவில் உள்ள பிற மாடல்களில் உள்ளது போல், டர்ன் இண்டிகேட்டர் இடது புறத்திலும், லைட்கள் வலது புறத்தில் மாற்றி அமைக்கபட்டுள்ளது.

வைபர் ஸ்டால்க்கை புஷ் செய்த உடன் ரெயின் சென்ஸிங் வைப்பர் ஆன் செய்யபடுகிறது.

ரியர் ஃபாக் லேம்ப்;

ரியர் ஃபாக் லேம்ப்;

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில், ரியர் ஃபாக் லேம்பின் பட்டன், டிரைவரின் வலது பக்கத்தில் பொருத்தபட்டுள்ளது.

ரோட்டரி நாப் ஆனது, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்பிற்காக ஒரு கூடுதல் அம்சம் கொண்டுள்ளது.

விண்ட்ஷீல்ட்;

விண்ட்ஷீல்ட்;

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விண்ட்ஷீல்ட்டில் மேல் மத்தியில் (டாப் செண்டர்), ஒரு நீண்ட பிளாக் ஸ்ட்ரிப் உள்ளது.

இதில் தான், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், அட்டோ-டிம்மிங் கண்ணாடிகள் (மிர்ரர்) மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்களுக்கான லைட் சென்ஸார்கள் உள்ளன.

ஹேண்ட்பிரேக்;

ஹேண்ட்பிரேக்;

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஹேண்ட்பிரேக் டிரைவருக்கு மேலும் நெருக்கமாக பொருத்தபட்டுள்ளது.

மேலும், இதன் 12 வி சாக்கட், யூஎஸ்பி / ஆக்ஸ் போர்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் மாற்றி அமைக்கபட்டுள்ளது. ஹேண்ட்பிரேக்கிற்கு அலுமினியம் ரிங்குகள் மற்றும் லெதர் ஃபினிஷ் வழங்கபட்டுள்ளது.

பிற மாற்றங்கள்;

பிற மாற்றங்கள்;

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில், பிற மாற்றங்களாக, கியர் ஷிஃப்ட் பூட்டிற்கு அலுமினியம் ஃபினிஷிங் செய்யபட்ட பார்டர் வழங்கபட்டுள்ளது. மேலும், இதன் உள்பகுதியில் உள்ள டோர் ஹேண்டில்களுக்கு அலுமினியம் ஃபினிஷிங் வழங்கபட்டுள்ளது.

பழைய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில், இவை சில்வர் நிறத்தில் இருந்தன.

கருத்துகள் ஏற்பு;

கருத்துகள் ஏற்பு;

ஃபோர்டு நிறுவனம் இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் ஏராமான பிரிமியம் மாற்றங்கள் செய்துள்ளனர்.

மேலும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை ஏற்றுகொண்டு, இந்த எஸ்யூவி மாடலின் சில பணிச்சூழலியல் மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

விலை மாற்றங்கள்;

விலை மாற்றங்கள்;

சமீபத்தில் தான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்டது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படை வேரிய்னட் 6.99 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டது.

பிரெஸ்ஸாவிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்கும் வகையில், புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலை வெகுவாக குறைக்கபட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், 6.69 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து துவங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலைகள் 1,12,000 ரூபாய் வரை அதிரடியாக குறைப்பு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
As India in the grip of compact SUV launches, Ford has given facelift to their EcoSport. Ford has added some updates and new features. Apart from giving premium changes, Ford has taken feedback from customers and changed some ergonomics also. New Ecosport starts with price tag of Rs. 6.69 lakh ex-showroom (Delhi). To know more, check here...
Story first published: Saturday, April 9, 2016, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X