ஒருவழியாக டொயோட்டா ஃபார்ச்சூனரை ஓவர்டேக் செய்த ஃபோர்டு எண்டெவர்!

Written By:

கடந்த ஏப்ரல் மாதத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனரை விற்பனையில் முந்தியிருக்கிறது புதிய ஃபோர்டு எண்வெடர்.

ரூ.25 லட்ச ரூபாய் பட்ஜெட் கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டில் முடிசூடா மன்னனாக வலம் வந்தது டொயோட்டா ஃபார்ச்சூனர். அந்த செக்மென்ட்டில் இருக்கும் பிற எஸ்யூவி மாடல்கள் நெருங்க முடியாத அளவுக்கு அதன் விற்பனை இருந்து வந்தது.

ஃபோர்டு எண்டெவர்
 

கம்பீரமான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின்கள் போன்றவை டொயோட்டா ஃபார்ச்சூனரை முதலிடத்தில் வைத்து இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் புத்தம் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன், ஃபார்ச்சூனர் கம்பீரத்திற்கு ஈடுகொடுக்கும் பிரம்மாண்டம், நவீன தொழில்நுட்ப வசதிகள் என புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதற்கு கைமேல் பலனாக தற்போது புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 509 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த மாதத்தில் 560 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகள்

இது ஃபோர்டு நிறுவனத்துக்கு இது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாடல் வந்ததன் பிறகு, டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விற்பனை உயர்வதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி தற்போது 158 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 197 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

English summary
The Toyota Fortuner has been a good selling model for the carmaker and also a preferred choice for customers in the SUV range. But that has changed, since in April 2016, the Ford Endeavour has outsold the Fortuner.
Story first published: Monday, May 16, 2016, 11:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark