2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி, இந்தியாவில் ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம்

By Ravichandran

வரும் ஜனவரி 20ந் தேதி புதிய தலைமுறை ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது.

இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யபட உள்ள 2016 ஃபோர்டு என்டெவர் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய 2016 ஃபோர்டு என்டெவர் அறிமுகம் பற்றி...

புதிய 2016 ஃபோர்டு என்டெவர் அறிமுகம் பற்றி...

2016 ஃபோர்டு என்டெவர், 2016 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது.

சமீபத்திய தகவல்களின் படி, இந்த 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது. புதிய ஃபோர்டு என்டெவர் தான், ஃபோர்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும்.

புக்கிங்கள் துவிங்கியது;

புக்கிங்கள் துவிங்கியது;

பல ஃபோர்டு டீலர்ஷிப்களிடம், இந்த 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி-க்கான அறிமுகத்திற்கு முன்பான ப்ரீ-புக்கிங் துவங்கியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், 1 லட்சம் ரூபாய் என்ற டோக்கன் கட்டணத்துடன், 2016 ஃபோர்டு என்டெவர் காரின் புக்கிங்கள் ஏற்கபட்டு வருகிறது.

டெல்லி என்சிஆர் பகுதிகளில் கிடைக்காது...

டெல்லி என்சிஆர் பகுதிகளில் கிடைக்காது...

புதிய 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி, அதிக டிஸ்பிலேஸ்மெண்ட் (இடம் பெயர்தல் திறன்) கொண்டுள்ளது.

டெல்லி என்சிஆர் பகுதிகளில், அதிக திறன் உடைய டீசல் இஞ்ஜின் கொண்ட டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி, டெல்லி என்சிஆர் பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்காது.

இஞ்ஜின் தேர்வுகள், திறன்;

இஞ்ஜின் தேர்வுகள், திறன்;

புதிய 2016 ஃபோர்டு என்டெவர், 3.2 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் அளவிலான டிடிசிஐ டர்போ டீசல் இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளது.

3.2 லிட்டர் இஞ்ஜின், 197 பிஹெச்பி-யையும், 470 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் 2.2 லிட்டர் இஞ்ஜின், 158 பிஹெச்பி-யையும், 385 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்;

டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்;

ஃபோர்டு நிறுவனம் இந்த புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி-யை, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்குகிறது.

2.2 லிட்டர் இஞ்ஜின் உடைய என்டெவர், 4x4 டிரைவ் மற்றும் 4x2 டிரைவ் தேர்வுகளுடன் வழங்கபடுகிறது.

3.2 லிட்டர் இஞ்ஜின் உடைய 2016 என்டெவர், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன், 4x4 டிரைவ் தேர்வுடன் கிடைக்கின்றது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்திய சந்தைகளை பொருத்த வரை, புதிய 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி, செவர்லே ட்ரெயில்பிளேசர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட், சாங்யாங் ரெக்ஸ்டன் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட வாகனங்களுடன் கடும் போட்டி எதிர்கொள்ள வேண்டிய நிலை நேரிடும்.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

புதிய 2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி-யின் பேஸ் வேரியண்ட், 20 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரும் விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஃபோர்டு என்டெவர், ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகிறது

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஃபோர்டு என்டெவர்

அடுத்த 9 மாதங்களில் 3 புதிய கார் மாடல்கள்: ஃபோர்டு தகவல்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Ford New Endeavour SUV could be launched in India on January 20th 2016. This all-new premium SUV Ford New Endeavour from Ford India is the Ford's third generation model offered in India. Many Ford dealerships have already commenced the pre-booking of the new Endeavour with a token amount of Rs. 1 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X