இந்தியாவில் 40,000 ஃபோர்டு ஃபீகோ, ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் கார்கள் ரீகால்

By Ravichandran

ஃபோர்டு இந்தியா நிறுவனம், தாங்கள் வழங்கும் ஃபோர்டு ஃபீகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் காம்பேக்ட் செடான் கார்களை இந்தியாவில் ரீகால் செய்ய உள்ளனர். இந்த ரீகால் நடவடிக்கையானது, இந்த கார்களில் உள்ள ஏர்பேக்குகளின் உள்ள பென்பொருள் (சாஃப்ட்வேர்) பிரச்னையால் ரீகால் மேற்கொள்ளபடுகிறது. இந்த ரீகால் நடவடிக்கையின் போது சுமார் 40,000 கார்கள் ரீகால் செய்யபடலாம்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், தங்களின் ஷோரூம்களை வாகனங்களின் டெலிவரி, டெஸ்ட் டிரைவ் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கேட்டு கொண்டுள்ளனர். ஃபோர்டு நிறுவனம் இந்த பிரச்னைக்கான தீர்வுகளை காண ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது வெரும் மென்பொருள் தொடர்பான பிரச்னையாக மட்டுமே இருப்பதால், இதை சில மணி நேரங்களில் சரி செய்து விட முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக நாம் பேசி கொண்டிருக்கும் போதே, இந்த ரீகால் நடவடிக்கைக்கு தீர்வாக புதிய மென்பொருள் அனைத்து ஃபோர்டு ஷோரூம்களுக்கும் அனுப்பி வைக்கபட்டு வருகிறது. இந்த ரீகால் பிரச்னை தொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனமே வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து, அவர்களை இந்த பிரச்னையை சரி செய்து கொள்ள அழைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கைக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த விதமான கூடுதல் கட்டனமும் வசூலிக்கபடாது.

ford-figo-and-aspire-airbag-software-issue-recall

தற்போதைய நிலையில், கட்டாய ரீகால் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் சரியான விதிமுறைகளும் கிடையாது. வெகு விரைவில், ரீகால் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் புதிய கொள்கைகளை வகுக்க உள்ளது. இதன்படி, எந்த ஒரு நிறுவனம் மூலமும் எந்த குறைகள் கண்டுபிடிக்கபட்ட உடன், அது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஃபோர்டு ஃபீகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் காம்பேக்ட் செடான் ஆகிய 2 மாடல்களுமே பேஸ் வேரியண்ட்களில் இருந்தே ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் கொண்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க இந்த 2 மாடல்களை சார்ந்திருக்கின்றது. இந்த 2 மாடல்களும் இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

Most Read Articles
English summary
Ford India would issue recall of their Figo hatchback and Figo Aspire compact sedan. This recall is because of a software issue related to the airbags. Approximately 40,000 or more cars shall be recalled for rectification. As it is a software issue, the problem should would be solved in couple of hours. Ford India will personally inform its customers regarding this issue...
Story first published: Saturday, April 23, 2016, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X