7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்... பாதுகாப்பு அம்சத்தில் சிறந்த கார்!

Written By:

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பகீரத முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இதற்கு தக்கவாறு சில கார் நிறுவனங்கள் இப்போதே தங்களது கார் மாடல்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஃபோர்டு நிறுவனம் தனது ஆஸ்பயர் காரின் பாதுகாப்பு அம்சங்களை வெகுவாக அதிகரித்து வருகிறது.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

ஏற்கனவே, ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், டியூவல் ஏர்பேக்குகளும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பயர் காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதலாக 5 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

பக்கவாட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இரண்டு கர்டெயின் ஏர்பேக்குகள் மற்றும் விபத்தின்போது ஓட்டுனரின் முழங்காலை பாதுகாப்பதற்கான ஒரு ஏர்பேக் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட மார்க்கெட்டில் முதல்முறையாக முழங்கால்களை பாதுகாக்கும் ஏர்பேக்குடன் வந்திருக்கும் முதல் கார் ஃபோர்டு ஆஸ்பயர்தான்.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

தற்போது 7 ஏர்பேக்குகளுடன் வந்திருக்கும் ஃபோர்டு ஆஸ்பயர், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடலாக இருக்கிறது. அத்துடன், விலைக்கு ஏற்ற சிறந்த மதிப்பு கொண்ட காராகவும் மாறியிருக்கிறது.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் காரை அதிக நிலைத்தன்மையுடன் செல்ல வைக்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் நுட்பம், மலைச் சாலைகளில் ஏறும்போது கார் பின்னோக்கி உருளாமல் தடுக்கும் ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்று இருக்கினறன.

7 ஏர்பேக்குகளுடன் வந்த ஃபோர்டு ஆஸ்பயர்...!

மேலும், பிரேக் பவரை அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் இந்த மாடலில் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த கார் பாதுகாப்பு அம்சத்தில் மிகச் சிறந்த மாடலாக மாறியிருக்கிறது.

English summary
Ford has updated the safety features on its Figo Aspire AT Titanium trim.
Please Wait while comments are loading...

Latest Photos