மழைகாலத்தை வரவேற்கும் விதமாக ஃபோர்டு மான்சூன் செக்கப் கேம்ப் துவக்கம்

Written By:

மழைகாலத்தை வரவேற்கும் விதமாக ஃபோர்டு இந்தியா நிறுவனம், ஃபோர்டு மான்சூன் செக்கப் என்ற பெயரில் சர்வீஸ் செக்கப் கேம்ப்களை நடத்துகிறது.

பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் இந்த சர்வீஸ் முகாம்கள் ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஃபோர்டு மான்சூன் செக்கப் கேம்ப்பில், 42-பாயின்ட் செக்கப் நடத்தப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் இலவச கார் வாஷ் மற்றும் இதர தள்ளுபடிகளை பெற்று கொள்ளலாம்.

ford-monsoon-service-camp-details-and-benefits-in-india

இந்த ஃபோர்டு மான்சூன் செக்கப் கேம்ப், 209 நகரங்களில், 376 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களில், வெவ்வேறு கட்டங்களில் நடத்தப்படும். மழைகாலம் தொடர்பான அனைத்து கவலைகளையும் போக்கும் விதமாகவே இந்த சர்வீஸ் கேம்ப்கள் நடத்தப்படுகிறது.

இது குறித்து, ஃபோர்டு இந்தியா அதிகாரி என்.பிரபு ஏராளமான தகவல்களை தெரிவித்தார். அவர், "வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு செவி சாய்ப்பது எங்கள் கடமையாகும். மழைகாலம் நெருங்கி வருவதை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு குடும்பம் போன்ற உணர்வு அளிப்பதே எங்கள் நோக்கம் ஆகும். மழைகாலத்தின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்கள் இல்லாத டிரைவிங் அனுபங்களை மேற்கொள்வதற்கு எங்களின் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காத்திருக்கின்றனர்" என தெரிவித்தார்.

ford-monsoon-service-camp-details-benefits-india

ஃபோர்டு மான்சூன் சர்வீஸ் கேம்ப்பின் போது, கிடைக்கும் ஆதாயங்கள்;

1) இலவச கார் பாடி வாஷ் மற்றும் செக்கப்

2) ஆயில் ஃபில்டர் மீது 50% தள்ளுபடி

3) வைப்பர் பிளேட்கள் மற்றும் இன்செர்ட்கள் மீது 50% தள்ளுபடி

4) பேட்டரிகள் மீது 1000 ரூபாய் தள்ளுபடி (பய்பேக்)

5) பிரேக் பேட்கள் மற்றும் ஷாக் அப்சார்பர்கள் மீது 10% தள்ளுபடி

6) ஃபோர்டு அங்கீகரித்த வேல்யூ ஆட்டட் சர்வீஸ்கள் மீது 10% தள்ளுபடி

7) குறிப்பிட்ட பிராண்ட்கள் மற்றும் குறிப்பிட்ட அளவிலான டயர்கள் 3,615 ரூபாய் முதல் துவங்கும்

8) 5+ ஆண்டுகள் பழமையான வாடிக்கையாளர்களுக்கு, டயர்கள் தவிர அனைத்து சர்வீஸ்கள் மீதும் கூடுதலாக 10% தள்ளுபடி

English summary
Ford Welcomes this Monsoon by setting up Service Camps in India. Starting from June 13, Ford will have camp running till June 19, 2016. Ford monsoon camp will include free 42 point checkup and customers can avail free carwash and other discounts. Ford monsoon camp will be hosted in 376 sales and service facilities in 209 cities in phased manner. To know more, check here...
Story first published: Tuesday, June 14, 2016, 15:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark