இந்தியாவில் 48,700 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் ரீகால்

Written By:

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் வழங்கப்பட்ட 48,700 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் இந்த ரீகால் நடவடிக்கையை தாமாக முன்வந்து மேற்கொள்கிறது. ஃப்யூவல் லைன் மற்றும் பிரேக் லைன்கள் மற்றும் ரியர் ஃபோல்டிங் சீட்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக இந்த ரீகால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

இதில் 48,000 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள், ஏப்ரல் 2013 முதல் ஜுன் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கபட்டவை ஆகும். இந்த ரீகால் செய்து, ஃப்யூவல் லைன் மற்றும் பிரேக் லைன்களில் புதிய பந்தில் கிளிப் பொருத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2016 முதல் பிப்ரவரி 2016-க்கும் இடையில், 60/40 ரியர் ஃபோல்டிங் சீட்டுடன் தயாரிக்கபட்ட 700 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களையும் ரீகால் செய்ய ஃபோர்டு நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

ford-motor-india-recall-48700-ecoSport-suvs-in-india

சில ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில், 40 சதவிகித ரியர் சீட் பேக் ரெஸ்ட்கள், ஃபோர்டு நிறுவனத்தின் தரத்தின் விவற்குறிப்புகளுக்கு குறைந்த தரத்திலான மெட்டீரியல் கொண்டு செய்யபட்டிருக்கலாம். இதனால் இந்த போல்ட்கள் உடைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்தகைய பல்வேறு காரணங்களாலேயே இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

இந்த ரீகால் நடவடிக்கைகளின் போது, மேற்கொள்ளப்படும் இந்த பழுது சரிபார்ப்புகளுக்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி உரிமையாளர்கள் மேற்பட்ட தகவல்களுக்கு, அருகில் உள்ள ஃபோர்டு டீலரை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இது வரை, இந்த பழுதுகளால், இறப்போ அல்லது யாருக்கும் எந்த விதமான காயங்களோ ஏற்படவில்லை.

English summary
Ford Motors issued a voluntary recall of 48,700 EcoSport SUVs in India. This recall is to fix faulty fuel and brake lines and rear folding seats. Ford India will recall 48,000 EcoSport diesel vehicles, made between April 2013 and June 2014, and would install a new bundle clip on fuel and brake lines. To know more about Ford EcoSport Recall, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more