ஃபோர்டு மஸ்டாங் கார் ஜனவரி 28-ல் இந்தியாவில் அறிமுகம் எனத் தகவல்?

Written By:

ஃபோர்டு மஸ்டாங் காரின் இந்திய அறிமுகம், ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகிறது.

விரைவில் வெளியாக உள்ள ஃபோர்டு மஸ்டாங் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஃபோர்டு நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் ஃபோர்டு மஸ்டாங், 2016 டெல்லி எக்ஸ்போவில் நிகழ உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால், தற்போது ஜனவரி 28-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

2015-ல் இறக்குமதி;

2015-ல் இறக்குமதி;

ஃபோர்டு மஸ்டாங் கார், 2015-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யபட்டது.

ஆனால், அப்போது விற்பனைக்காக இறக்குமதி செய்யபட்டதா அல்லது வேறு ஏதேனும் விஷயங்களுக்காக அறிமுகம் செய்யபட்டதா என தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்தது.

2014-ல் சர்வதேச சந்தைக்கு அறிமுகம்;

2014-ல் சர்வதேச சந்தைக்கு அறிமுகம்;

தி மஸில் கார் என அழைக்கபடும் ஃபோர்டு மஸ்டாங், சர்வதேச சந்தைகளில் 2014-ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யபட்டது.

ஆண்டுகள் செல்ல செல்ல, அதற்கு சில மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது. அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பொன் விழாவை ஒட்டி, இந்த மஸ்டாங் காருக்கு சில் மேம்பாடுகள் செய்யபட்டது.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

இந்திய சந்தைகளை பொருத்த வரை, ஃபோர்டு மஸ்டாங் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கபட்ட முறையிலேயே விற்கபட உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஃபோர்டு மஸ்டாங் கார், சர்வதேச சந்தைகளில் பல்வேறு இஞ்ஜின் தேர்வுகளுடன் விற்கபடுகிறது. ஆனால், இந்திய சந்தைகளில் 2 அல்லது 3 இஞ்ஜின் தேர்வுகளுடன் மட்டுமே விற்கபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகடும் அதிக திறன் கொண்ட ஃபோர்டு மஸ்டாங், 5.0 லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. தி மஸில் காரின் இந்த இஞ்ஜின், 437 பிஹெச்பி-யையும், 542 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. பேடல் ஷிஃப்டர்கள் கொண்ட இந்த இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக்

டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ரைட் ஹேண்ட் டிரைவ்;

ரைட் ஹேண்ட் டிரைவ்;

இந்த ஃபோர்டு மஸ்டாங் கார், இந்திய சாலைகளில் இயக்குவதற்கு ஏற்ற வகையில், ரைட் ஹேண்ட் டிரைவ் (வலது புற இயக்கம்) வசதியுடன் வெளியாகிறது.

1964-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது முதல் தற்போது தான் முதன் முறையாக ஃபோர்டு மஸ்டாங் கார், ரைட் ஹேண்ட் டிரைவ் தேர்வுடன் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

ஃபோர்டு மஸ்டாங் பிஎல்ஐஎஸ் எனப்படும் பிலைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் வசதியுடன் வருகிறது.

இந்த பிஎல்ஐஎஸ், பிலைண்ட் ஸ்பாட்-டில் இருக்கும் வாகனத்தை ரேடார் மூலம் ஆராய்ந்து சமிஞ்சைகளை வழங்குகிறது.

இதர அமசங்கள்;

இதர அமசங்கள்;

ஃபோர்டு மஸ்டாங், சிக்னேச்சர் ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், சீக்வென்ஷியல் டர்ன் சிக்னல்கள் உடைய எல்ஈடி ட்ரை-பார் டெய்ல் லேம்ப்கள் கொண்டுள்ளது.

மேலும், ஏராளமான கஸ்டமைசேஷன் தேர்வுகளுடனும் கிடைக்கிறது.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

தி மஸில் கார் அல்ல்து ஃபோர்டு மஸ்டாங் எனப்படும் இந்த கார், சுமார் 50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியா வரும் ஃபோர்டு மஸ்டாங் பற்றி 15 சுவாரஸ்யத் தகவல்கள்

புனே, அராய் மையத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
According to the sources, Ford Mustang is all set for Indian Debut on January 28th. Ford Mustang, also know as The Muscle Car was launched internationally, back in 2014 and was slowly updated from its predecessor. American automobile giant-Ford, provided some updates as the Mustang celebrated its Golden Jubilee.
Story first published: Tuesday, January 19, 2016, 17:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark