ஜெனரல் மோட்டார்ஸ், தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள க்ரூஸ் ஆட்டோமேஷனை கையகபடுத்தியது

By Ravichandran

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், செல்ஃப் டிரைவிங் கார் (தானியங்கி கார்) தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள க்ரூஸ் ஆட்டோமேஷன் என்ற ஸ்டார்ட் அப் (துவக்கநிலை) நிறுவனத்தை கையகபடுத்தியுள்ளனர்.

க்ரூஸ் ஆட்டோமேஷன் என்ற இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சான் ஃபிரான்சிஸ்கோவை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு முன்னோடியாக விளங்குகிறது.

Fortune.com வெளியிட்ட செய்திகளின் படி, டெட்ராய்ட்டை மையமாக கொண்டு இயங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த க்ரூஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தை கையகபடுத்த சுமார் 1 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தானியங்கி கார் தொழில்நுட்பத்தில், ஆப்பிள் மற்றும் கூகிள் ஆகிய கார் நிறுவனங்கள் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டியை எதிர் கொண்டு வருகிறது. க்ரூஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தை கையகபடுத்தும் செய்தி மற்றும் அதற்கான செலவுகள் தொடர்பாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் எந்த விதமான கருத்துகளையும் இது வரை தெரிவிக்கவில்லை.

general-motors-acquired-cruise-automation-self-driving-cars-technology-giant

வழக்கமான ஆடி ஏ4 அல்லது எஸ்4 மாடல் கார்களை, தங்களின் செல்ஃப் டிரைவிங் கார் கிட் மூலம் தானியங்கி கார்களாக மாற்றும் வகையிலான தொழில்நுட்பத்தை விற்க துவங்கியது முதல் இந்த க்ரூஸ் ஆட்டோமேஷன் நிறுவனம் புகழ் பெற துவங்கியது. க்ரூஸ் ஆட்டோமேஷன் விற்ற ஒவ்வொரு செல்ஃப் டிரைவிங் கார் கிட்டும் 10,000 டாலர்கள் மதிப்பில் விற்கபட்டு வந்தது.

க்ரூஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தை கையகபடுத்தியதை அடுத்து, இந்த நிறுவனத்தின் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை, தங்கள் நிறுவனம் தயாரித்து வெளியாக உள்ள கார்களில் ஒருங்கிணைக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஜனவரியில் தான், ஜெனரல் மோட்டார்ஸ் லிஃப்ட் என்ற பெயரிலான ரைட் ஷேரிங் (பங்கிட்ட சவாரி நடத்தும்) நிறுவனத்தை கையகபடுத்தியது. இந்த லிஃப்ட் நிறுவனத்தின் கார்களிலும், இந்த தானியங்கி கார் தொழில்நுட்பத்தை பொருத்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Most Read Articles
English summary
General Motors (GM) has acquired San Francisco based startup Cruise Automation, which is a pioneer in self-driving cars. According to Fortune.com, Detroit based GM has spent over $1 Billion to acquire Cruise Automation as it battles other giants Apple and Google to get fully autonomous cars. To know more about this acquisition and related updates, check here...
Story first published: Monday, March 14, 2016, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X