வட்ட வடிவ டயருக்கு மாற்றாக கோள வடிவ டயர்: குட்இயர் அறிமுகம்

Written By:

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட்ட வடிவிலான டயர்களே வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குட்இயர் நிறுவனம் புதிய டயர் கான்செப்ட் ஒன்றை ஜெனீவா மோட்டார் ஷோ மூலமாக அறிமுகம் செய்தது.

தானியங்கி கார்களுக்கு சிறப்பான இந்த டயர் கான்செப்ட் ஜெனீவா மோட்டார் ஷோ வந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த கோள வடிவிலான டயர் பற்றிய கூடுதல் தகவல்களையும், இந்த டயரை பொருத்துவதால் ஏற்படும் பயன்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

கோள வடிவ டயர்களுக்கான முன் மாதிரியாக இந்த டயர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. குட்இயர் ஈகிள் 360 என்ற பெயரில் இந்த டயர் அழைக்கப்படுகிறது.

எளிதாக திருப்பலாம்

எளிதாக திருப்பலாம்

குறுகலான இடங்களில் எளிதாக வாகனங்களை திருப்புவதற்கு இந்த டயர் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பந்து வடிவம்

பந்து வடிவம்

பந்து போன்ற வடிவத்திலான இந்த டயர் மூலமாக அதிக தரைப்பிடிப்பை வாகனங்கள் பெறும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிர்வுகள் குறைவு

அதிர்வுகள் குறைவு

சஸ்பென்ஷன் அமைப்புடன் இந்த டயரை காந்த விசை மூலமாக பிணைப்பு ஏற்படுத்த முடியும் என்பதால், அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும். அதாவது, சஸ்பென்ஷனுடன் ஒரு சில மில்லிமீட்டர் இடைவெளியில் இந்த டயர் பிணைப்பில் இருக்கும்.

சீதோஷ்ண நிலை

சீதோஷ்ண நிலை

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் சாலை நிலைகளுக்கு தக்கவாறு இந்த டயரின் வடிவமைப்பில் 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாறுதல்களை செய்ய முடியும்.

360 டிகிரி கோணத்தில்...

360 டிகிரி கோணத்தில்...

இந்த டயர் 360 டிகிரி கோணத்தில் சுழலும் அமைப்பை பெற்றிருக்கிறது. இதனால், கார் வழுக்கிச் செல்வதை தவிர்க்கும்.

 பார்க்கிங் சுலபம்

பார்க்கிங் சுலபம்

360 டிகிரி கோணத்தில் டயர்கள் சுழல்வதால், குறுகலான இடத்தில் கூட எளிதாக காரை பார்க்கிங் செய்ய முடியும்.

தானியங்கி டயர்

தானியங்கி டயர்

இந்த டயரில் பல சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, சாலையில் இருக்கும் குண்டு குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் தன்மைக்கு தக்கவாறு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி செலுத்த உதவும். குறிப்பாக, தானியங்கி கார்களில் இந்த டயர் சிறப்பான பயன்பாட்டை அளிக்கும்.

 
English summary
The Goodyear Eagle-360 is a design concept tyre that would provide autonomous cars with ultimate maneuverability, and connectivity to increase safety.
Story first published: Wednesday, March 9, 2016, 10:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark