விபத்தில் சிக்கிக் கொண்ட கூகுள் தானியங்கி கார்...!!

By Meena

தானாக இயங்கும் செல்ஃப் டிரைவிங் கார்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் தலைவலிதான் போலும். பல முன்னணி நிறுவனங்கள் அந்த வகைக் கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன. அவற்றில் சில ஆட்டோ டிரைவ் ஆப்ஷன் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கும் வந்துள்ளன.

சாலையில் ஆட்டோ டிரைவிங் மோடில் கார்கள் செல்லும்போது, ஒரு சில விபத்துகள் நடப்பதுதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. மென்பொருள் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கும் இப்போது அப்படி நிலைதான் ஏற்பட்டுள்ளது.

கூகுள் கார்

ஆல்பாபெட் என்பது கூகுள் நிறுவனத்தின் தாய் கம்பெனி. எக்ஸ் என்ற பெயரில் அதன் கிளை நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவைதான் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் முக்கியப் பணிகள்.

அந்த நிறுவனம் தனது செல்ஃப் டிரைவிங் காரை தற்போது மேம்படுத்தி வருகிறது. பல முன்னணி கார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தனித்துவமான மென்பொருளில் அது வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கலிஃபோர்னியாவின் லாஸ் அல்ட்டோஸ் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி நேர்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டது எக்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார்.

சாலையில் அந்த வண்டி சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் 11 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த மிட்சுபிஷி கார் ஒன்று வேகமாக மோதியதாகத் தெரிகிறது. இதனால் எக்ஸ் தானியங்கி காரின் பின்புறத்தில் உள்ள பாகங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குக் காரணமான மிட்சுபிஷி கார் அந்தப் பகுதியிலிருந்து விரைவாக நகர்ந்து விட்டதாம். இதனால், அந்தக் காரை யார் ஓட்டி வந்தார்கள்? எவருக்குச் சொந்தமான வாகனம் அது? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் நிறுவனம் கலிஃபோர்னியா காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எக்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார்கள் விபத்தில் சிக்கிக் கொள்வது இது முதல் முறையல்ல. தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பது கூகுள் நிறுவனத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது, வாடிக்கையாளர்கள் மத்தியில் தானியங்கி கார்கள் மீதான நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தை எழுப்பக் காரணமாக அமைகின்றன.

Most Read Articles
English summary
Google's Self-Driving Car Involved In Hit And Run Crash.
Story first published: Monday, August 8, 2016, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X