நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவு

Written By:

இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளை (ஸ்பீட் பிரேக்கர்) அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது.

நாம் நெடுஞ்சாலைகளில் கூட ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கபட்டிருப்பதை காண முடியும். இந்த வேகத்தடைகள் சிக்கல்கள் இல்லாத வாகன போக்குவரத்திற்கு தடையாக இருப்பதுடன், வாகனம் இயக்குபவர்களுக்கும் ஆபத்தாக விளங்குகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் வெளியிட்ட செய்தி படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளையும், சாலை போக்குவரத்து தொடர்பான ஆணையங்களான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் (என்ஹெச்ஏஐ), எல்லைபகுதி சாலைகள் ஆணையம் (பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் - Border Roads Organisation) ஆகியவற்றிற்கு ஒரு அவசர உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த உத்தரவில், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளை அகற்றவும், இது தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு இந்த ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கபட்டுள்ளது.

government-orders-removal-of-speed-breakers-from-highways

முன்னதாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கபட்டிருப்பது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டது. இதில், "சிக்கல்கள் இல்லாத வாகன போக்குவரத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கபட்டுள்ளது. ஆங்காங்கே வேகத்தடைகள் இருப்பது, வேகமான போக்குவரத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான விபத்துகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது" என தெரிவித்தது.

2014-ஆம் ஆண்டில் வெளியான மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அறிக்கைகளின் படி, அந்த காலகட்டம் வரை ஆங்காங்கே குழிகள் உள்ளதாலும், வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளதாலும் 6,672 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

English summary
The Government of India has ordered for removal of all speed breakers from highways across India. These Speed Breakers weaken smooth movement of traffic and also remain safety hazard for motorists. Union Road Transport Ministry has ordered all state governments and road agencies to provide details of action taken by 20 April. To know more, check here...
Story first published: Saturday, April 16, 2016, 16:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more