ஒவ்வொரு செக்மென்ட்டிலும் அதிக மதிப்புடைய யூஸ்டு கார்கள்!

Written By:

புதிய கார் மார்க்கெட்டுக்கு இணையாக விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது யூஸ்டு கார் மார்க்கெட். தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்களே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்வதால், இந்த மார்க்கெட்டின் மீது அதிக நம்பிக்கையும், விற்பனைக்கு பின் சிறப்பான சேவையை பெறும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், குறைவான பட்ஜெட்டில் யூஸ்டு கார் வாங்குவதே சிறந்தது என முடிவெடுத்திருப்பவர்களுக்காக, யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஒவ்வொரு செக்மென்ட்டிலும் சிறந்த மதிப்புடைய கார் மாடல்களின் விபரங்களையும், அதன் விலை உள்ளிட்ட சில அடிப்படை தகவல்களையும் வழங்கியிருக்கிறோம்.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

யூஸ்டு மார்க்கெட்டில் அதிக டிமான்ட் உள்ள கார் மாடல். அதிக ஹெட்ரூம், குறைந்த பராமரிப்பு செலவு, நெருக்கடியான இடங்களிலும் எளிதாக பயன்படுத்தும் வாய்ப்பு, குறைவான விலை போன்றவை இந்த காருக்கு அதிக டிமான்ட்டை ஏற்படுத்தியிருக்கும் விஷயம்.

 • விலை: ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 30,000 முதல் 40,000 கிமீ வரை
 • மைலேஜ்: சராசரியாக 16-18 கிமீ/லி
 • வயது: 4- 5 ஆண்டுகள்
மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக மதிப்புடைய கார் மாடல். அருமையான டிசைன், அதிக மைலேஜ், சரியான விலை போன்றவற்றால் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற மாடல்.

 • விலை: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 30,000 கிமீ முதல் 50,000 கிமீ வரை
 • மைலேஜ்: 16 கிமீ/லி முதல் 18 கிமீ/லி வரை
 • வயது: 4 முதல் 10 ஆண்டுகள் வரை
ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வாங்க முனைவோரின் முதல் சாய்ஸ். டிசைன், வசதிகள் மற்றும் நீடித்த உழைப்பு மூலமாக வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை பெற்ற மாடல்.

விலை: ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை[பெட்ரோல்/டீசல்]

ஓடிய தூரம்: 30,000 கிமீ முதல் 40,000 கிமீ வரை

மைலேஜ்: 14 கிமீ/லி முதல் 17 கிமீ/லி வரை

வயது: 3 முதல் 5 ஆண்டுகள்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

காம்பேக்ட் செடான் கார்களில் யூஸ்டு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் கார் ஹோண்டா அமேஸ். டிசைன், மைலேஜ், ஹோண்டா பிராண்டின் மீதான வசீகரம் போன்றவை இந்த காருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

 • விலை: ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 30,000 கிமீ முதல் 40,000 கிமீ வரை
 • மைலேஜ்: 12 கிமீ/லி முதல் 18 கிமீ/லி வரை
 • வயது: 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை
மாருதி டிசையர்

மாருதி டிசையர்

விற்பனையில் கலக்கி வரும் மாருதி டிசையருக்கு யூஸ்டு மார்க்கெட்டிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. காரணம், குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பதே.

 • விலை: ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 40,000 கிமீ முதல் 60,000 கிமீ வரை
 • மைலேஜ்: 14 கிமீலி முதல் 18 கிமீலி வரை
 • வயது: 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை
ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

பலரின் கனவு பிராண்டு ஹோண்டா சிட்டி. தற்போதைய மாடல் என்றில்லை, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முந்தைய தலைமுறை மாடல்களுக்கு கூட யூஸ்டு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. டிசைன், தரமான பாகங்கள் இந்த காரை உயர்த்திப் பிடிக்கும் விஷயங்கள்.

 • விலை: ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை[தலைமுறையை பொறுத்து]
 • ஓடிய தூரம்: 30,000 கிமீ முதல் 70,000 கிமீ தூரம் வரை
 • மைலேஜ்: 11 கிமீலி முதல் 15 கிமீலி
 • வயது: 4 முதல் 7 ஆண்டுகள்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சிறந்த டிசைன், கட்டுமானத் தரம், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல். யூஸ்டு மார்க்கெட்டிலும் சிறந்த மதிப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.

 • விலை: ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 20,000 கிமீ முதல் 40,000 கிமீ வரை
 • மைலேஜ்: 12 கிமீலி முதல் 18 கிமீலி வரை
 • வயது: 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை
 மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

சரியான விலையில் மதிப்பான 7 சீட்டர் கார். யூஸ்டு மார்க்கெட்டிலும் விற்பனையில் கலக்குகிறது. மாருதியின் சேவை தரம் இந்த காரின் மிகப்பெரிய பலம்.

 • விலை: ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 10,000 கிமீ முதல் 40,000 கிமீ வரை
 • மைலேஜ்: 12 கிமீலி முதல் 16 கிமீலி வரை
 • வயது: 2 முதல் 4 ஆண்டுகள்
டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி வகை கார் மாடல். சிறப்பான இடவசதி என்பதே இதன் மிகப்பெரிய பலம். அத்துடன், டொயோட்டாவின் நம்பகத்தன்மை கொண்ட கார் மாடல்களில் ஒன்று.

 • விலை: ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 35,000 கிமீ முதல் 1.20 லட்சம் கிமீ வரை
 • மைலேஜ்: 9 கிமீலி முதல் 11 கிமீலி வரை
 • வயது: 2 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை
டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் கலக்கி வரும் இந்த எஸ்யூவி வகை கார், யூஸ்டு மார்க்கெட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் கம்பீரமான தோற்றம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை கவர்ந்து வருகிறது.

 • விலை: ரூ.14 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை
 • ஓடிய தூரம்: 15,000 கிமீ முதல் 1.20 லட்சம் கிமீ வரை
 • மைலேஜ்: 8 கிமீ/லி முதல் 10 கிமீ/லி
 • வயது: 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை
அதிக மதிப்புடைய யூஸ்டு கார்கள்!

பெட்ரோல், டீசல் கார்களின் சராசரி மைலேஜ் விபரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தலைமுறை மாற்றங்கள், ஓடிய தூரத்தை வைத்து விலை விபரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 
English summary
The used cars market is much bigger than the new cars market. If you are looking to buy a used car, don't you want a good resale value for it? Read on to find out the list of used cars to buy with resale value.
Story first published: Monday, May 9, 2016, 9:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark