ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மறுஅறிமுகம்

Written By:

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடான் இந்தியாவில் இந்த அக்டோபர் மாதத்தில் மறுஅறிமுகம் செய்யப்பட உள்ளது. எவ்வளவு தான் திறன்மிக்க பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட கார்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்திலான கார்களுக்கு எப்போதுமே சிறப்பு மவுசு உள்ளது.

அந்த வகையில், ஹோண்டா நிறுவனம், தங்களின் ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்ய உள்ளனர். ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புக்கிங்;

புக்கிங்;

இந்தியாவில் சில ஹோண்டா ஷோரூம்கள் மட்டும், ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானின் புக்கிங்கை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இதை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், 51,000 ரூபாய் என்ற டோக்கன் புக்கிங் கட்டணத்தை செலுத்தி, புக்கிங் செய்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடான், இந்த அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்ற செய்தி மட்டுமே வெளியாகி கொண்டிருக்கிறது. எனினும், இதன் அறிமுகம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடான், இந்த தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அறிமுகம் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ள, வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஹோண்டா ஷோரூம்களை அணுகலாம்.

சர்வதேச சந்தைகளில் விற்பனை;

சர்வதேச சந்தைகளில் விற்பனை;

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடான், ஏற்கனவே பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ளது. இந்த 9-ஆம் தலைமுறை ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடான், முன்னதாக இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

தற்போதைய நிலையில், இது அபரிதமான அளவில் விற்பனையாகும் மாடலாக இருக்குமா அல்லது இருக்காதா என தெளிவாக தெரியாத நிலை உள்ளது. இதனால், ஹோண்டா நிறுவனம், இந்த ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானை சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட முறையிலேயே இந்தியாவில் விற்பனையில் செய்ய உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானில், எலக்ட்ரிக் மோட்டார் உடனான 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டிருக்கும். இதன் பெட்ரோல் இஞ்ஜின் 141 பிஹெச்பியையும், இதன் எலக்ட்ரிக் மோட்டார் 75 பிஹெச்பியையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானின் இஞ்ஜின் ஒட்டுமொத்தமாக 306 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

விலை;

விலை;

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் பிரிமியம் செடானின் விலை விவரங்களும் இது வரை வெளியாகவில்லை. எனினும், இதன் பேஸ் வேரியன்ட் எனப்படும் அடிப்படை வேரியன்ட் சுமார் 22 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், டாப் என்ட் வேரியன்ட் சுமார் 26 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா அக்கார்டு தாய்லாந்தில் அறிமுகம்... விரைவில் இந்தியாவில்

அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா அக்கார்டு கார்!

மீண்டும் இந்தியா வரும் ஹோண்டா அக்கார்டு... எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - ஸ்பீடோமீட்டர்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - ஸ்பீடோமீட்டர்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - ஸ்பீடோமீட்டர்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - முன்பக்க டிசைன்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - முன்பக்க டிசைன்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - முன்பக்க டிசைன்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பானட்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பானட்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பானட்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் - பக்கவாட்டு தோற்றம்

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Cars India will be reintroducing its premium sedan named Accord Hybrid in India. Honda Accord Hybrid is expected to be launched sometime during October 2016. Customers can book their Accord Hybrid with token Bokking Amount of Rs. 51,000. Honda Cars India will be offering Accord Hybrid as CBU (Completely Built Unit). To know more, check here...
Story first published: Saturday, September 10, 2016, 14:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark