புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் ரிலீஸ் தேதி வெளியாகியது

Written By:

ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடல், அக்டோபர் 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தொழில்நுட்ப ரீதியில் திறன்மிக்க கார் மாடல்களை தயாரிப்பதில் புகழ்பெற்றது. அந்த வகையில், அடுத்ததாக அக்கார்ட் மாடலில் ஹைப்ரிட் வேரியன்ட்டை அறிமுகம் செய்ய உள்ளனர்.

புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

விற்கப்பட உள்ள விதம்;

விற்கப்பட உள்ள விதம்;

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலை, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட வடிவில் விற்பனை செய்ய உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட், 4 சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர், ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் உடன், ட்வின் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 1.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று சேர்ந்து 184 பிஹெச்பியையும், 315 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா நிறுவனம், இந்த புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலின் இஞ்ஜினை இ-சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

போட்டி;

போட்டி;

புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலுக்கு நேரடி போட்டியாக விளங்குவது டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் ஆகும்.

ஆதாயம் இல்லை;

ஆதாயம் இல்லை;

துரதிர்ஷ்டவசமாக, புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலுக்கு மத்திய அரசு வழங்கும் ஃபேம் ஸ்கீம் அடிப்படையில் எந்த ஆதாயமும் கிடைக்காது.

கேம்ரி பெரும் ஆதாயம்;

கேம்ரி பெரும் ஆதாயம்;

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், இதற்கு வரி குறைப்பு செய்யப்படுவதொடு மட்டுமல்லாமல், ஊக்கத்தொகைகளும் கிடைக்கிறது. புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலுக்கு இந்த சலுகைகள் எதுவும் கிடைக்கப்பதில்லை. இதனால், இதன் இறுதி விலையில் பெரிய பிரபாவம் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

விற்பனை பாதிப்பு;

விற்பனை பாதிப்பு;

புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட், 40 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட், 34.88 என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை விலை கொண்டுள்ளது. இந்த விலை வித்தியாசத்தில் இருக்கும் வேறுபாடுகள், புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலின் விற்பனையில் தாக்கத்தை ஏற்ப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா அக்கார்ட், இந்திய வாகன சந்தைகளில் வெறும் பெட்ரோல் மாடலில் அறிமுகம் செய்யப்படுமா என்று இதுவரை எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், ஹோண்டா நிறுவனம் அதிக அளவிலான எண்ணிக்கையை குறிவைத்து கொண்டில்லை.

புக்கிங்;

புக்கிங்;

தற்போதைய நிலையில், டீலர்ஷிப்கள் புதிய ஹோண்டா அக்கார்ட் ஹைப்ரிட் மாடலின் புக்கிங் ஏற்க துவங்கிவிட்டனர்.

English summary
Honda Cars India is planning to introduce all-new Accord Hybrid on October 25, 2016. This new hybrid vehicle from Honda will be imported and sold as Completely Built Unit (CBU). Unfortunately, Honda Accord Hybrid does not receive FAME Scheme incentives. As of now, dealerships have commenced accepting bookings of Honda Accord Hybrid. To know more, check here...
Story first published: Friday, September 30, 2016, 7:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos