பொலிவுகூட்டபட்ட 2016 ஹோண்டா அமேஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மாடலை ஹோண்டா கார் நிறுவனம் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய 2016 ஹோண்டா அமேஸ் பற்றி...

புதிய 2016 ஹோண்டா அமேஸ் பற்றி...

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் தான், ஹோண்டா நிறுவனம் சார்பாக 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட முதல் மாடல் ஆகும்.

புதிய 2016 ஹோண்டா அமேஸ், பெரிதும் எதிர்பார்ப்புகள் உருவாக்கிய மாடல்களில் ஒன்றாகும்.

முன்னதாக, 2013-ஆம் ஆண்டில் தான் ஹோண்டா அமேஸ் மாடல் அறிமுகம் செய்யபட்டது. அதன் பின்னர், முதன்முறையாக, தற்போது தான் இந்த மாடலுக்கு மேம்பாடுகள் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முன்பு வழங்கபட்ட மாடல்களை போலவே, அதே பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், 1.2 லிட்டர் கொள்ளளவு உடையதாகும்.

இதன் பெட்ரோல் இஞ்ஜின், 6,000 ஆர்பிஎம்களில் 86 பிஹெச்பியையும், 4,500 ஆர்பிஎம்களில் 109 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், 1.5 லிட்டர் கொள்ளளவு உடையதாகும்.

இதன் டீசல் இஞ்ஜின், 3,600 ஆர்பிஎம்களில் 98 பிஹெச்பியையும், 1,750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் (மேனுவல்) வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 17.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் (ஆட்டோமேட்டிக்) வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 18.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஆனால், டீசல் இஞ்ஜின் கொண்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ், ஒரு லிட்டருக்கு 25.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானின், பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் இரண்டுமே, 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாகஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதே நேரத்தில், பெட்ரோல் வேரியண்ட், 5-ஸ்பீட் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் இணைக்கபட்டு வழங்கபடுகிறது.

டிசைன்;

டிசைன்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானுக்கு புதிய தோற்றத்தை வழங்குவதற்காக, இதற்கு ஹோண்டா நிறுவனம் சில சிறிய சிறிய மாற்றங்களை வழங்கியுள்ளது.

அதிக அளவிலான குரோம் கொண்டுள்ள இதன் ஃப்ரண்ட் கிரில், ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளது போன்றே உள்ளது.

2 பம்பர்களும், ஃப்ரண்ட் பம்பர்களுடன் பற்றித் திருகி இழுத்து முடுக்கிவிடபட்டுள்ளது. இதனால், பெரிய ஏர் இண்டேக்குகள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வசதியாக புதிய உள்ளமைப்புகளுடன் பொருந்தியுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய டேஷ்போர்டுடன், ஹோண்டா ஜாஸ் எம்பிவி-யில் உள்ளது போன்றே புதிய இன்ஸ்ட்ருமண்ட் கிளஸ்டர், இந்த புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானிலும் உள்ளது.

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானில், ஹோண்டா சிட்டி மாடலில் இருந்து ஏற்கபட்டுள்ள செண்ட்ரல் ஸ்பைன் உள்ளது. இந்த செண்ட்ரல் ஸ்பைன், புதிய புளூடூத் ஆடியோ மற்றும் டச்ஸ்கிரீன் கண்ட்ரோல்கள் உடைய புதிய ஆட்டோமேட்டிக் ஏர்கண்டிஷனிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

இதனால், இதன் இண்டீரியர் முன்பை விட நன்றாக தோன்றுகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், புதிய புளூ டைடானியம் மெட்டாலிக் உட்பட கோல்டன் ப்ரௌன் மெட்டாலிக், ஆர்சிட் வைட் பெர்ல், கமிலியன் ரெட் பெர்ல், டஃபெட்டா வைட், அலபஸ்டர் சில்வர் மெட்டாலிக், அர்பன் டைடேனியம் மெட்டாலிக் ஆகிய 7 நிறங்களில் கிடைக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களிடம் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், மாருதி ஸ்விஃப்ட் டிசைர், ஹூண்டாய் எக்ஸ்செண்ட், ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பைர் மற்றும் விரைவில் வெளியாக உள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள் - பெட்ரோல் வேரியண்ட்;

விலை விவரங்கள் - பெட்ரோல் வேரியண்ட்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை ஹோண்டா அமேஸ் மாடலின் விலைகளிலேயே விற்கபடுகிறது.

இ (எம்டி) - 5,29,900 ரூபாய்

எஸ் (எம்டி) - 5,95,400 ரூபாய்

எஸ்எக்ஸ் (எம்டி) - 6,80,500 ரூபாய்

விஎக்ஸ் (எம்டி) - 7,19,900 ரூபாய்

எஸ் (ஏடி) - 7,19,900 ரூபாய்

விஎக்ஸ் (ஏடி) - 8,19,900 ரூபாய்

விலை விவரங்கள் - டீசல் வேரியண்ட்;

விலை விவரங்கள் - டீசல் வேரியண்ட்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை ஹோண்டா அமேஸ் மாடலின் விலைகளிலேயே விற்கபடுகிறது.

இ (எம்டி) - 6,41,900 ரூபாய்

எஸ் (எம்டி) - 7,29,900 ரூபாய்

எஸ்எக்ஸ் (எம்டி) - 7,82,000 ரூபாய்

விஎக்ஸ் (எம்டி) - 8,19,900 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் கார், மார்ச் 3-ஆம் தேதி அறிமுகம்

விற்பனையில் சரசரவென ஒரு லட்சத்தை கடந்த ஹோண்டா அமேஸ்!

அமேஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Honda has launched their facelifted new 2016 Honda Amaze compact sedan in India. 2016 Honda Amaze is offered with same petrol and diesel engines, as found in the previous model. 2016 Honda Amaze is available in 7 different colors including the new Blue Titanium Metallic. 2016 Honda Amaze is available across all dealerships in India.
Story first published: Thursday, March 3, 2016, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X