பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் கார், மார்ச் 3-ஆம் தேதி அறிமுகம்

By Ravichandran

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ், மார்ச் 3-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

புதிய 2016 ஹோண்டா அமேஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய 2016 ஹோண்டா அமேஸ் பற்றி...

புதிய 2016 ஹோண்டா அமேஸ் பற்றி...

ஹோண்டா அமேஸ் மாடல் முன்னதாக 2013-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்னர், முதன்முறையாக, தற்போது தான் இந்த மாடலுக்கு மேம்பாடுகள் வழங்கபட்டுள்ளது.

மேலும், புதிய 2016 ஹோண்டா அமேஸ் தான், ஹோண்டா நிறுவனம் மூலம் செய்யபடும் முதல் அறிமுகம் ஆகும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலுக்கான முக்கிய மாற்றங்கள் இதன் எக்ஸ்டீரியரில் தான் செய்யபட்டுள்ளது. புதிய 2016 ஹோண்டா அமேஸ், அதன் ஃப்ரண்ட் க்ரில்லில் கூடுதல் குரோம் பூச்சும், மறுஸ்டைலிங் செய்யபட்ட ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் பம்பர்கள் ஸ்போர்ட்டியான மற்றும் அகன்ற ஆங்கிள் டிசைன்கள் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலில் இண்டீரியருக்கான மாற்றங்களாக, புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் மற்றும் சிறிய மாற்றங்கள் செய்யபட்ட டேஷ்போர்ட் பொருத்தபட்டுள்ளது.

புதிய வண்ணங்கள்;

புதிய வண்ணங்கள்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடல், மெட்டாலிக் புளூ ஷேட் வேலைபாட்டுடன் கிடைக்கிறது. இதே வண்ண தேர்வு, பிரியோ மாடலிலும் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலின் இஞ்ஜின் பொருத்த வரை, எந்த விதமான மாற்றங்களும் செய்யபடாமல் அப்படியே தொடரப்படுகிறது.

புதிய 2016 ஹோண்டா அமேஸ், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என இரு இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலின், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 87 பிஹெச்பியையும் மற்றும் 109 என்எம் டார்க்கையும் வெளிபடுத்துடம் திறன் கொண்டுள்ளது. பெட்ரோல் இஞ்ஜினுக்கு ஒரு ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டும் வழங்கபடுகிறது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலின், 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 99 பிஹெச்பியையும் மற்றும் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்துடம் திறன் கொண்டுள்ளது. இதன் டீசல் இஞ்ஜின், ஒரு சிஎன்ஜி கிட் தேர்வுடனும் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலின், அனைத்து மேனுவல் டிரான்ஸ்மிஷன்களும், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் டிசையர், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பைர், டாடா செஸ்ட், ஹூண்டாய் எக்ஸ்செண்ட் மற்றும் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யபட உள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆகிய மாடல்களுடன் அறிமுகம் செய்யபட உள்ள மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

தற்போதைய விலை நிலவரங்கள்;

தற்போதைய விலை நிலவரங்கள்;

தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா அமேஸ், 5.26 லட்சம் ரூபாய் முதல் 8.29 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

விலை ஏற்றம் எவ்வளவு?

விலை ஏற்றம் எவ்வளவு?

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலின் விலைகள், தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை காட்டிலும், 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் கூடுதலான விலையில் விற்கபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர்வி, புதிய அக்கார்டு கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

400 நகரங்கள், 23,800கிமீ பயணம்... ஹோண்டா அமேஸ் கின்னஸ் சாதனை

அமேஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Honda's new 2016 Amaze facelift is launched on March 3rd, 2016. This model was launched in 2013 and receives makeover for first time. This would be Honda's first launch in the year 2016. Current models are sold with price tag of Rs. 5.26 lakh to Rs. 8.29 lakh ex-showroom (Delhi). New 2016 Amaze would be costlier by Rs. 10,000 to Rs. 20,000.
Story first published: Tuesday, March 1, 2016, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X