ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் மே 6-ஆம் தேதி அறிமுகம்

Written By:

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் மே 6-ல் அறிமுகம் செய்யபடும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா பிஆர்-வி...

ஹோண்டா பிஆர்-வி...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தங்களின் அடுத்த தயாரிப்பான ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது.

இது மிகவும் எதிர்பார்க்கபட்ட மாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, பிரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ ஆகியவற்றின் பிளார்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதற்கான இஞ்ஜின், ஹோண்டா சிட்டி மற்றும் மொபிலியோ ஆகிய மாடல்களில் இருந்து பெறபட்டுள்ளது. எனினும், ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி-க்கு தேவையான பவரை அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யபடும்.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின், 6600 ஆர்பிஎம்களில் 117 பிஹெச்பியையும், 4600 ஆர்பிஎம்களில் 145 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்த பெட்ரோல் இஞ்ஜின், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளுடன் வெளியாகிறது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் இஞ்ஜின், 3600 ஆர்பிஎம்களில் 99 பிஹெச்பியையும், 1750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்த டீசல் இஞ்ஜின், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின், பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 17 முதல் 18 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின், டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட், ஒரு லிட்டருக்கு சுமார் 26 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவிக்கான உட்புற அமைப்புகள், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி மாடலிடம் இருந்து பகிர்ந்து கொள்ளபடுகிறது.

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி உட்புறத்தில், மிக தெளிவாக மற்றும் அழகாக காட்சி அளிக்கும் கண்ட்ரோல்கள் உடைய ட்யூவல் டோன் டேஷ்போர்ட் கொண்டுள்ளது.

7-ஸீட்டர்;

7-ஸீட்டர்;

இதன் செக்மண்ட்டில், முதல் முறையாக ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி தான் முதல் முதலாக 7-ஸீட்டர் செக்மண்ட் மாடலாக அறிமுகம் செய்யபடுகிறது.

இதனால் தான், பிரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ ஆகியவற்றின் பிளார்ஃபார்ம், இந்த ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவிக்கும் ஏற்று கொள்ளபட்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, பெரும்பாலும் எஸ்யூவியை போன்றே காட்சியளிக்கிறது.

எனினும், 7 பயணியர்கள் அமர ஏதுவாக, இதன் 3-வது வரிசை இருக்கைகள் சரிவான பின் தோற்றத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது. இதனால், இது எம்பிவியை போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பகுதியில் ஒரு பெரிய சிங்கிள் ஸ்லாட் கிரில் உடைய குரோம் ஸ்ட்ரிப் உள்ளது.

இந்த குரோம் ஸ்ட்ரிப், ஏர் டேம்களை இரு சமக்கூறிடும் வகையிலும், ஆங்குலார் ஹெட்லேம்ப்களை இணைக்கும் வகையிலும் உள்ளது.

இதன் முன் பம்பர் மற்றும் ரியர் பம்பர், நன்கு செதுக்கபட்டது போன்றும், கூர்மையாகவும் காட்சியளிக்கிறது. எல்இடி-க்களால் ஆன இதன் டெயில் லேம்ப்கள் ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளது. மேலும், ஒரு ரிஃப்லக்டர் 2 டெயில்லேம்ப்-களை இணைக்கும் வகையில் உள்ளது.

பக்கவாட்டு தோற்றம்;

பக்கவாட்டு தோற்றம்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் பக்கவாட்டு தோற்றம், மொபிலியோ காரின் டிசைனை நினைவுபடுத்தும் வகையில் சற்று நீண்டு காணப்படுகிறது.

3 வரிசையிலான இருக்கைகளை வழங்குவதற்காக ஹோண்டா நிறுவனம், இந்த ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை இப்படி வடிவமைதிருக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி ட்யூவல் ஏர்பேக்குகள் இபிடி உடைய ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும்.

மேலும், எஸ்யூவி டிசைன் மொழியை வெளிபடுத்தும் வகையிலான விஎஸ்ஏ எனப்படும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSA-Vehicle Stability Assist), ஹில் ஸ்டார்ட் மற்றும் பிஏ எனப்படும் பிரேக் அசிஸ்ட் (BA-Brake Assist) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும்.

போட்டி;

போட்டி;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்க்கும்.

விலை;

விலை;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

ஹோண்டா பிஆர்-வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda India would launch their first compact SUV, BR-V in India on May 6, 2016. The Engine is shared from Honda City and Mobilio. Honda BR-V boasts of first-in-segment 7-seater layout. It would compete with Hyundai Creta and Renault Duster. It shall be priced in the range of Rs. 8 to 12 lakh ex-showroom. To know more about Honda BR-V SUV, check here...
Story first published: Wednesday, April 27, 2016, 12:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark