ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம்

Written By:

ஹோண்டா நிறுவனம், தங்களின் புதிய தயாரிப்பான ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியை பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம் செய்தது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா பிஆர்வி...

ஹோண்டா பிஆர்வி...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கபட்ட மாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஹோண்டா பிஆர்வி, அமேஸ் மற்றும் மொபிலியோ ஆகியவற்றின் பிளார்ஃபார்மில் வடிவமைக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, 117 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, 98 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

1.5 லிட்டர் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் இரண்டுமே 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் பெட்ரோல் வேரியன்ட் மட்டும் பேட்டல் ஷிஃப்டர்கள் கொண்ட 6-ஸ்பீட் சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கபட்டுள்ளது.

பெட்ரோல் மாடல் - மைலேஜ்;

பெட்ரோல் மாடல் - மைலேஜ்;

மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 15.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட், ஒரு லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

டீசல் மாடல் - மைலேஜ்;

டீசல் மாடல் - மைலேஜ்;

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் டீசல் இன்ஜின் மாடல், ஒரு லிட்டருக்கு, 21.9 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

டிசைன்;

டிசைன்;

முன் பக்க டிசைன்;

சதுரம் (squared) போல் ஆக்கபட்ட முன்பக்க தோற்றத்தில் இருந்து, ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, இதன் இணை மாடலான சிஆர்-வி மாடலை ஞாபக படுத்தும் வகையில் உள்ளது.

இதன் குரோம் கிரில், பெரிய ஏர் டேம் மீது அமைந்துள்ளது. குரோம் கிரில்லின் இரு பக்கத்திலும் மெல்லிய ஹெட்லேம்ப்கள் புடைசூழ அமைந்துள்ளது.

ரியர்;

ரியர்;

எல்இடி டெயில்லேம்ப்கள் மட்டுமே கொண்டுள்ள ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ரியர் பகுதிகள் மிகவும் சாதுவாக தோற்றம் அளிக்கிறது.

இதன் அதீதமான தட்டையான ரியர் தோற்றத்தில் இருந்து, இதன் நம்பர் பிளேட் ஹோல்டர் மீது அமைந்துள்ள குரோம் ஸ்லாட் சற்று வேறுபாடுகளை வழங்குகிறது.

பக்கவாட்டு டிசைன்;

பக்கவாட்டு டிசைன்;

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்களுக்கு ஃபாக்ஸ் (faux) ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தபட்டுள்ளது.

இதன் அடிபகுதிகளில், பிளாஸ்டிக் கிளாட்டிங் வழங்கபட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் இன்டீரியர் பகுதிகளில், பிரிமியம் தோற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் செண்டர் கன்சோல், இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றிற்கான கண்ட்ரோல்களை கொண்டுள்ளது. இது பியானோ பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது.

இதன் ஸ்டீயரிங் வீல், இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் டாப் என்ட் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியன்ட், பேடில் ஷிஃப்டர்கள் கொண்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் புக்கிங், இதன் அறிமுகத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, தற்போது, பெங்களூரூ மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள ஹோண்டா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலைகள் - 1;

விலைகள் - 1;

வேரியன்ட் - இ

பெட்ரோல் - 8,86,100 ரூபாய்

டீசல் - 9,99,900 ரூபாய்

வேரியன்ட் - எஸ்

பெட்ரோல் - 9,99,900 ரூபாய்

டீசல் - 11,13,500 ரூபாய்

வேரியன்ட் - வி

பெட்ரோல் - 11,05,800 ரூபாய்

டீசல் - 12,01,700 ரூபாய்

விலைகள் - 2;

விலைகள் - 2;

வேரியன்ட் - விஎக்ஸ்

பெட்ரோல் - 11,99,800 ரூபாய்

டீசல் - 13,08,500 ரூபாய்

வேரியன்ட் - வி (சிவிடி)

பெட்ரோல் - 12,14,800 ரூபாய்

டீசல் - பொருந்தாத தேர்வு

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

ஹோண்டா பிஆர்வி பற்றிய 5 முக்கியமான விஷயங்கள் - முழு விவரங்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda BR-V compact SUV was launched regionally in Bangalore. Honda BR-V comes with Petrol Engine and Diesel Engine options, which has capacity of 1.5-litres each. Honda BR-V Prices starts at Rs. 8.86 Lakhs in Bangalore. Both petrol and diesel engines are mated with 6-speed manual gearbox. To know more about Honda BR-V compact SUV and other details, check here...
Story first published: Friday, May 13, 2016, 18:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark