பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் ரிலீஸ் தேதி வெளியாகியது

Written By:

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் இந்தியாவில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய வாகன சந்தைகளில், பண்டிகை காலங்களின் போது, தங்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஹோண்டா நிறுவனமும், புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹோண்டா பிரியோ...

புதிய ஹோண்டா பிரியோ...

ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் முதன் முதலாக, 2011-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் சுமார் 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பொலிவு கூட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், நல்ல தரமான மாடலாக இருந்தாலும், இது சற்று மெதுவாக விற்பனையாகும் மாடல் ஆகும். தற்போது பொலிவு கூட்டப்பட்டு வெளியிடப்பட உள்ள புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இதன் விற்பனையையும் கூட்டும் என எதிர்பார்க்கலாம்.

தோற்றம்;

தோற்றம்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவிற்கு வெளியே விற்கப்படும் இந்த ஆண்டு வெளியான பிரியோ மாடலை போலவே இருக்கும். புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் பெரும்பாலான அம்சங்கள், இந்தியாவில் விற்பனையில் உள்ள பொலிவு கூட்டப்பட்டு வெளியான அமேஸ் காம்பேக்ட் செடான் போன்றே இருக்கும்.

ஒட்டுமொத்த தோற்றம்;

ஒட்டுமொத்த தோற்றம்;

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டுள்ளது. இதன் ஆங்குளார் ஃபிரண்ட் பம்பர் மற்றும் புதிய கிரில், இந்த மாற்றங்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

இன்டீரியர் படி, புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், அமேஸ் காம்பேக்ட் செடான் மற்றும் ஹோண்டா பிஆர்வி மாடல்களில் உள்ளது போன்ற டேஷ்போர்ட் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களில் படி, இந்த புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், புதிய ஆடியோ சிஸ்டம் கொண்டிருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், அதே 1.2-லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான், சிவிடி கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது. அதே போல், புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கும் சிவிடி கியர்பாக்ஸுடன் வழங்கப்படுமா என காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், அக்டோபர் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது. இது, இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களுக்கு முன்னதாக வெளியாவதால், இது மேலும் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.

விலை;

விலை;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் விலை, தற்போதைய மாடலின் விளையிலேயோ அல்லது சிறிய அவவிலான விலை ஏற்றத்துடன் விற்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் செப்டம்பரில் அறிமுகம்

English summary
Honda Cars India would launch facelifted Brio hatchback in India on October 4th, 2016, ahead of festive season. New Brio facelift looks similar to updated version launched outside India earlier this year. Honda has facelifted New Brio with sportier look, which can be seen with angular front bumper and new grille to compliment these changes. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more