இந்தியாவில் ஹோண்டாவின் 1,90,578 கார்களுக்கு ரீகால் அழைப்பு

Written By:

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் விற்கப்பட்டுள்ள மொத்தம் 1,90,578 ஹோண்டா கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.

ஹோண்டா நிறுவனம், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. ரீகால் செய்யப்படும் கார்களில் அதிகப்படியான கார்கள், டகாட்டா ஏர் பேக் சிக்கலால் திரும்ப அழைக்கப்படுகிறது என ஹோண்டா கார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. டகாட்டா நிறுவனம் தயாரித்து வழங்கிய ஃ பிரண்ட் மற்றும் சைட் ஏர் பேக் இன்ஃப்லேட்டர்களில் பழுது உள்ளது.

honda-cars-india-recall-190578-vehicles-affected-takata-airbags-issue

எந்த ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட, எந்த மாடல்களில், எவ்வளவு கார்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது;

(1) 22,483 ஹோண்டா அக்கார்ட் கார்கள் - 2003-2011 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை

(2) 1,514 ஹோண்டா சிஆர்-வி கார்கள் - 2009-2011 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை

(3) 2 ஹோண்டா சிவிக் - 2007-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை

(4) 13,603 ஹோண்டா சிவிக் - 2009-2011 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை

(5) 1,37,270 ஹோண்டா சிட்டி - 2008-2011 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை

(6) 15,706 ஹோண்டா ஜாஸ் - 2009-2011 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை

வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனம், இந்த ரீகால் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதா, என தெரிந்து கொள்ள,

கிழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...

https://www.hondacarindia.com/PUD5VG/6CA6DA6EAPUDCustomerInquiry.aspx

இந்த லிங்க்கில் சென்ற உடன்,

உங்கள் வாகனத்தின் 17 இலக்க ஆல்ஃபா-நியூமரிக் வெஹிகிள் ஐடென்ட்டிஃபிகேஷன் நம்பரை நிரப்பினால், உங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.

honda-cars-india-recall-190578-vehicles-affected-takata-airbags-fault

இந்த ஏர் பேக் இன்ஃப்லேட்டர்களின் ரீப்லேஸ்மன்ட் எனப்படும் மாற்றி தரும் நடவடிக்கை, வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக, ஹோண்டா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கலுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த ரீகால் நடவடிக்கையை, ஹோண்டா நிறுவனம், தாமாக முன் வந்து செய்வதாகவும், இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

honda-cars-india-recall-190578-vehicles-affected-takata-airbags-problem

ஹோண்டா சிவிக் மற்றும் சிஆர்-வி மாடல்களின் ரீப்லேஸ்மன்ட் மட்டும், ஜூலை 15 (இன்று) துவங்கிவிடும். ஹோண்டா மற்றும் டகாட்டா நிறுவனங்கள், உலகம் முழுவதும், இத்தகைய அதிக எண்ணிக்கையிலான ரீகால் நடவடிக்கைகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெருகின்றனர்.

கோளாறுகள் நிறைந்த ஏர் பேக் சிக்கலால் நடைபெற்று வரும் இந்த ரீகால் நடவடிக்கைகள் தான், சமீபத்திய வரலாற்றில் மிக பெரிய ரீகால் நடவடிக்கைகளாக உள்ளன.

English summary
Honda Cars India has announced recall of 1,90,578 units in India, sold by Honda India. These Recall is made for the Models, which were affected by Takata Airbags. Both front and passenger side airbag inflators have some issues, which was manufactured by Takata. Replacement of airbag inflators will commence from September 2016. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more