ஹோண்டா சிட்டி காரின் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம்!

Posted By: Gopi

சாலைகளில் ஜிவ்வென பறக்கும் ஹோண்டா சிட்டி கார்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் மாடல்களில் ஒன்று. இதுபோன்ற செடான் கிளாஸ் (சொகுசு ரகங்கள்) வடிவமைப்பில் சிறியரக ஹேட்ச்பேக் கார்கள் வந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.

விலை குறைவாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் பார்க்கும்போது கண்ணைக் கவரும் சொகுசு கார் போலவும் இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. அதுவும் ஜப்பானின் மிகப்பெரிய கார் நிறுவனமான ஹோண்டா, அப்படியொரு மாடலைத் தயாரித்தால் எப்படியிருக்கும்?

ஹோண்டா ஜினியா

ஆம். ஜினியா என்ற பெயரில் ஹோண்டா சிட்டி மாடலை அடிப்படையாக வைத்து புதிய ஹேட்ச்பேக் கார்களைத் தயாரித்து வருகிறது அந்நிறுவனம். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நெட்டில் ஹிட் அடித்துள்ளன.

ஹோண்டா நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பு கார்கள் பலவற்றின் சாயல்களின் மொத்த வடிவமாகக் காட்சியளிக்கிறது ஜினியா. முன்பகுதி விளக்குகள் மற்றும் கிரில்கள் ஹோண்டா சிட்டி மாடலின் சாயலை ஒத்துள்ளன.

ஹோண்டா கார்

ஜினியாவின் பின்பகுதி சிவிக் மாடலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமாராங் வடிவ டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறிய பட்டையாக அந்த லைட்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஹேட்ச்பேக் ரக கார்களை சீனாவில் சந்தைப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு இந்த மாடல் வருமா? வராதா? என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

நம் ஊரின் போக்குவரத்து மற்றும் மக்களின் விருப்பத்துக்கேற்ப புதிய ஹேட்ச்பேக் ரக கார்களை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்துக் களமிறக்கினால், அது வைரல் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Honda City Based Hatchback Revealed.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark