ஹோண்டா கார்களின் விலை ரூ.10,000 வரை உயர்த்தபட்டுள்ளது

Written By:

ஹோண்டா நிறுவனம், தங்கள் தயாரிப்புகளின் விலைகளை 10,000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.

ஹோண்டா நிறுவனம் சார்பாக செய்யபட்டுள்ள விலை ஏற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

2016-ல் விலைகள் உயர்வு;

2016-ல் விலைகள் உயர்வு;

2016-ஆம் ஆண்டில், ஹோண்டா இந்தியா, இந்தியா முழுவதும் விற்கபடும் தங்கள் நிறுவனம் சார்பாக விற்கபடும் அனைத்து கார்களின் விலைகளையும் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மாடல்களை பொருத்து இந்த விலை ஏற்றம் அமைந்திருக்கும். ஹோண்டா கார் இந்தியா மூலம் செய்யபட்ட குறைந்தபட்ச விலை ஏற்றம், ரூபாய் 2000-மாக உள்ளது.

பிரியோ ஹேட்ச்பேக்;

பிரியோ ஹேட்ச்பேக்;

நுழைவு-நிலை மாடலான பிரியோ ஹேட்ச்பேக் காரின் விலை, ரூபாய் 2,000 கூட்டபட்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பிறகு, பிரியோ ஹேட்ச்பேக்

கார் 4.28 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடும்.

சிட்டி செடான்;

சிட்டி செடான்;

ஹோண்டா சிட்டி செடான் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் மீதும் பரவலாக 3,000 ரூபாய் உயர்த்தபட்டுள்ளது.

விலையேற்றத்திற்கு பிறகு, ஹோண்டா சிட்டி செடான் மாடல் 7.64 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபட உள்ளது.

ஹோண்டா மொபிலியோ;

ஹோண்டா மொபிலியோ;

ஹோண்டா மொபிலியோ எம்பிவி-யின் விலை 3,000 ரூபாய் உயர்த்தபட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு, 6.82 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) துவக்க விலையில் விற்கபட உள்ளது.

ஜேஸ் பிரிமியம் ஹேட்ச்பேக்;

ஜேஸ் பிரிமியம் ஹேட்ச்பேக்;

ஹோண்டா ஜேஸ் பிரிமியம் ஹேட்ச்பேக்-கின் விலை 4,800 ரூபாய் உயர்த்தபட்டுள்ளது.

விலையேற்றத்திற்கு பிறகு, ஹோண்டா ஜேஸ் பிரிமியம் ஹேட்ச்பேக், 5.45 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) துவக்க விலையில் விற்கபட உள்ளது.

ஹோண்டா சிஆர்-வி;

ஹோண்டா சிஆர்-வி;

இந்திய சந்தைகளில், ஹோண்டா நிறுவனம், ஒரே ஒரு எஸ்யூவியை தான் விற்பன்பை செய்கிறது. ஹோண்டாவின் சிஆர்-வி பிரிமியம் எஸ்யூவி மீது தான் அதிகப்படியான விலையேற்றம் செய்யபட்டுள்ளது.

ஹோண்டா சிஆர்-வி பிரிமியம் எஸ்யூவி மீது 10,000 ரூபாய் விலை ஏற்றம் செய்யபட்டுள்ளது. இந்த விலையேற்றதிற்கு பிறகு, ஹோண்டா சிஆர்-வி பிரிமியம் எஸ்யூவி-யின் பேஸ் (அடிப்படை) வேரிண்ட், 21.24 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடும்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா;

வரவிருக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹோண்டா நிறுவனம், பல்வேறு புதிய தயாரிப்புகளை காட்சிபடுத்த உள்ளது.

புதிய அறிமுகங்கள்;

புதிய அறிமுகங்கள்;

இந்திய சந்தைகளில், பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, நியூ அக்கார்ட் உள்ளிட்ட பல்வேறு புதிய மாடல்கள் இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யபட உள்ளது.

இதர தொடர்பான செய்திககள்;

இதர தொடர்பான செய்திககள்;

ஹோண்டா தொடர்பான செய்திகள்

ஹோண்டா தொடர்பான செய்திகள் - 2

புதிய ஜாஸ் புண்ணியத்தில் மஹிந்திராவை முந்திய ஹோண்டா கார்ஸ்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
For the year 2016, Honda India has announced Price Hike upto Rs 10,000 across various ranges sold in India. The Cars sold by Honda India will witness a price of up to Rs. 10,000 based on the models. The minimum price hike announced by Honda Car India on its Cars is Rs. 2,000.
Story first published: Monday, January 11, 2016, 11:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark