பட்ஜெட்டில் கூடுதல் வரி: ஹோண்டா கார்களின் விலையும் உயர்ந்தது

Written By:

பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஹோண்டா கார்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மாடல்களை பொருத்து, விலை உயர்வு 4,000 ரூபாய் முதல் 79,000 ரூபாய் என்ற அளவில் வேறுபடுகிறது. சில தினங்களுக்கு முன்னதாக தான் மத்திய அரசு நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

புதிய பட்ஜெட்டின் படி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ் எனப்படும் வரி ஒன்று கூடுதலாக விதிக்கபடுகிறது. இந்த வரி, காரின் விலைகளையும் தாண்டி, 1% என்ற அளவில் விதிக்கபடுகிறது.

முன்னதாக, ஹூண்டாய் நிறுவனம், மாருதி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துவிட்டனர்.

ஹோண்டா ப்ரியோ ஹேட்ச்பேக் முதல் சிஆர்வி எஸ்யூவி வரை அனைத்து மாடல்களும் இந்த விலை உயர்வினால் பாதிக்கபட்டுள்ளது. ஹோண்டா அமேஸ் மாடல் இந்த விலை உயர்வினால் பாதிக்கபடவில்லை.

இந்த விலை உயர்வு, புதிய 2016 ஹோண்டா அமேஸ் மாடலை பாதிக்கவில்லை. இதற்கு காரணம், இது மத்திய அரசு நிதி பட்ஜெட் தாக்கல் செய்யபட்டதற்கு பிறகு அறிமுகம் செய்யபட்டது.

பட்ஜெட்டிற்கு முந்தைய அல்லது பட்ஜெட்டிற்கு பிந்தைய விலை ஏற்றம் அல்லது விலை குறைப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பட்ஜெட் தாக்கல் செய்யபடும் காலத்தை ஒட்டி எந்த புதிய அறிமுகங்களும் செய்யபடுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

honda-india-announced-car-price-hike-all-their-models

ஹோண்டா மாடல்கள் மீது செய்யபட்ட விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்;

மாடல் பெயர் - ப்ரியோ

விலை ஏற்றம் - 4,000 ரூபாய் - 6,000 ரூபாய்

மாடல் பெயர் - ஜாஸ்

விலை ஏற்றம் - 5,000 ரூபாய் - 19,500 ரூபாய்

மாடல் பெயர் - மொபிலியோ

விலை ஏற்றம் - 21,800 ரூபாய் - 37,700 ரூபாய்

மாடல் பெயர் - சிட்டி

விலை ஏற்றம் - 24,600 ரூபாய் - 38,100 ரூபாய்

மாடல் பெயர் - சிஆர்வி

விலை ஏற்றம் - 66,500 ரூபாய் - 79,000 ரூபாய்

English summary
Honda India has increased the prices of almost all their models. The Price hike are in the ranges of minimum of Rs. 4,000 to Rs. 79,000. This price hike is due to addition of the 1 per cent Infrastructure Cess, which is levied post Union Budget 2016 - 17. From Brio hatchback to CRV SUV all models are affected by Price Hike.
Story first published: Saturday, March 5, 2016, 10:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark