2016 ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

By Ravichandran

ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான வாகனங்கள் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதில் அறிமுகம் செய்யபடலாம என எதிர்பார்க்கபடும் ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹேட்ச்பேக்கின் ஸ்போர்டியான வடிவம்;

ஹேட்ச்பேக்கின் ஸ்போர்டியான வடிவம்;

ஹோண்டா நிறுவனம், தங்களின் பிரிமியம் ஹேட்ச்பேக்-கான ஜாஸ் காரை, 2015-ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்தது.

தற்போது, இந்த ஹேட்ச்பேக்-கின் ஸ்போர்டி வெர்ஷன் (வடிவம்) அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய ஜாஸ், இந்திய சந்தைகளில் ஆர்எஸ் பேட்ஜுடன் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆர்எஸ் தேர்வு;

ஆர்எஸ் தேர்வு;

ஆர்எஸ் என்பது ரேலி ஸ்போர்ட் என்பதை குறிக்கின்றது. தற்போதைய நிலையில், இந்தியாவில் ஹோண்டா மோபிலியோ மட்டுமே ஆர்எஸ் தேர்வுடன் கிடைக்கிறது.

ஆர்எஸ் பேட்ஜ் கொண்ட ஹோண்டா ஜாஸ், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால், இந்த ஆட்டோ எக்ஸ்போவின் போது, ஹோண்டா நிறுவனம் என்ன செய்ய உள்ளது என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடபடவில்லை.

எனினும், ஹோண்டா நிறுவனம், இந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஏதேனும் சிறப்பான அறிமுகங்களை செய்ய உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

இந்த ஆர்எஸ் மாடல், ஸ்போர்ட்டியான ரேஸ் பிரபாவம் கொண்ட பாடி கிட் கொண்டிருக்கும்.

இதோடு மட்டுமல்லாமல், ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும். தற்போது, இதில் பொருத்தபட்டுள்ள இஞ்ஜின் மூலமாகவே அதிகமான திறனை உருவாக்க ஹோண்டா இஞ்ஜினியர்கள் முயன்று வருகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

2016 ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் ஹேட்ச்பேக், புதிய ஆல்லாய் வீல்கள், கிளாஸ்ஸி பிளாக் ஃப்ரண்ட் கிரில் உள்ளது.

மேலும், இதில் ட்யூவல் எக்ஸ்ஹாஸ்ட் போர்ட்-கள், ஏரோடைனமிக் ஸ்பாய்ளர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பொருத்தபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

2016 ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் ஹேட்ச்பேக், கூடுதல் ஸ்போர்டியான மற்றும் ரேஸ் பிரபாவம் மிக்க தோற்றத்தை வழங்கும் வகையில் மேம்படுத்த பட உள்ளது.

இந்தோனேஷியாவில் மட்டும் விற்பனை;

இந்தோனேஷியாவில் மட்டும் விற்பனை;

தற்போதைய நிலையில், ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் மாடல், இந்தோனேஷியாவில் மட்டும் விற்பனை செய்யபடுகிறது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் மாடல், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ரேன்ஜ் மற்றும் அபார்த் புண்டோ மாடல் கார்களுடன் போட்டியை எதிர் கொள்ள நேரிடும்.

ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் காரின் விலை, தற்போது இந்தியாவில் விற்கும் ஹேட்ச்பேக் காரின் விலையை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

2016 ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் ஹேட்ச்பேக், சுமார் 9 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரும்) என்ற விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

2016 ஹோண்டா ஜாஸ் ஆர்எஸ் மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Honda Jazz RS is expected to make its debut at 2016 Delhi Auto Expo. Earlier, Honda introduced their all-new premium hatchback, the Jazz in India during mid-2015 season. The Japanese car manufacturer is in plans to launch a more sportier version of this hatchback. This new Jazz might adorn RS badge in the Indian market.
Story first published: Tuesday, January 5, 2016, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X