ஹோண்டாவின் புதிய 7-சீட்டர் எஸ்யூவி விரைவில் அறிமுகம்
ஹோண்டா நிறுவனம், புதிய 7-சீட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், தரமான தயாரிப்புகளை மிதமான விலையில் வழங்குவதில், உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.
தற்போது ஹோண்டா நிறுவனம், இந்தியா மற்றும் ஆசியாவின் பிற வாகன சந்தைகளுக்காக பிரத்யேகமான 7-சீட்டர் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா நிறுவம் வழங்க உள்ள இந்த 7-சீட்டர் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

7-சீட்டர்...
ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத புதிய 7-சீட்டர் எஸ்யூவி, ஹோண்டா ஹெச்ஆர்வி மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் புதிய 7-சீட்டர் எஸ்யூவி, இந்த மாதம் நடைப்பெற உள்ள ஃபில்லிபைன் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் (Philippine International Motor Show (PIMS)) அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி;
ஹோண்டாவின் இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி, தாய்லாந்தில் உள்ள ஹோண்டாவின் ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

முக்கிய சந்தைகள்;
ஹோண்டாவின் இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி, இந்தியா உள்ளிட்ட பிற ஆசிய வாகன சந்தைகளுக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
பொதுவாக, எஸ்யூவிகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் பிஆர்-வி மாடலை அறிமுகம் செய்தது. இது மாறி வரும் சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும்.

ஹோண்டா கருத்து;
இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி, நுழைவு நிலை மாடலாக இருக்கும். மேலும், மெல்லிய மற்றும் ஸ்டைலான டிசைன் கொண்ட இது, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. கூடுதலாக, தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவியில் இருக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

எஸ்யூவியின் ட்ரென்ட்;
பெரும்பாலான சந்தைகளில், எஸ்யூவிகளின் ஆதிக்கம் தான் நிலவி வருகிறது, இந்த ட்ரென்ட் மேலும் தொடரும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்தது.
குறிப்பாக, ஹோண்டா பிஆர்-வி மாடல், ஹூண்டாய் கரெட்டா போன்ற கார்களுடனும், எதிர்பார்க்கப்படும் ஹெச்ஆர்-வி, மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி300 போன்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில் இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!
ஹோண்டா பிஆர்வி காரை கம்ப்ளீட்டாக பார்க்கலாம் வாங்க!
இந்தியாவில் ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியை களமிறக்க திட்டம்
குறிப்பு; இந்த செய்தியில் காண்பிக்கப்பட்ட படங்கள், பிஆர்வி 7-சீட்டர் எஸ்யூவியின் மாதிரி படங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








