ஹூண்டாய் நிறுவனம், சிஸ்கோ சிஸ்டம்ஸ் இடையே தொழில்நுட்பம் உருவாக்கதிற்கு கூட்டணி
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனமும், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனமும் இணைந்து, இண்டர்னெட் இணைக்கபட்ட கார் தொழில்நுட்பத்தை (Internet connected car technology) உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.
தானியங்கி கார்கள் உருவாக்கத்திற்கும், நகரும் வாகனங்களில் உயர் திறன் கொண்ட (ஹை-பர்ஃபார்மன்ஸ்) கம்ப்யூட்டர் ("high-performing computers on wheels") சிஸ்டோ சிஸ்டம்ஸ் நிறுவனத்துடனான கூட்டணி ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.
இது தொடர்பாக, ஹூண்டாய் நிறுவனத்தின் துணை சேர்மேன் சுங் யூய்-சன் மற்றும் சிஸ்கோ நிறுவன தலைவர் சக் ராப்பின்ஸ் தென் கொரிய தலைநகர் சியோலில் சந்திந்து பேசினர். அப்போது இரு நிறுவனங்களும் இணைந்து, உயர்-வேகத்தில் அதிக அளவிலான டேட்டா-வை (தரவு) டிரான்ஸ்ஃபர் செய்ய கூடிய வகையிலான இன் - வெஹிகிள் டெக்னாலஜி உருவாக்க முடிவு செய்தனர்.

சிஸ்கோ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்துள்ளது, துறையில் முன்னோடியாக விளங்ககூடிய கனெக்டட் கார் பிளாட்ஃபார்ம் (இணைக்கபட்ட கார் தடம்) உருவாக்குவதற்காக தான் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








