ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனான பெட்ரோல் இஞ்ஜின் உள்ள க்ரெட்டா எஸ்யூவி அறிமுகம்

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) உடன் கூடிய பெட்ரோல் இஞ்ஜின் உள்ள க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்ய
உள்ளது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வெளியாக க்ரெட்டா எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகத்தின் நோக்கம்;

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகத்தின் நோக்கம்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தான் முதன் முதலாக, க்ரெட்டா வடிவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய டீசல் இஞ்ஜின் ஜொண்ட காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தனர்.

தற்போது, விற்பனையை மேலும் கூட்டும் நோக்கத்துடன், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) உடன் கூடிய பெட்ரோல் இஞ்ஜின் உள்ள க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியையும் அறிமுகம் செய்கின்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி, தேர்வு முறையிலான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.

பிற ட்ரிம்களுக்கும் ஏடி;

பிற ட்ரிம்களுக்கும் ஏடி;

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், பிற ட்ரிம்களிலும் இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்க திட்டமிட்டுள்ளனர். இது அனைத்து மக்களிடம், இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியை கொண்டு சேர்க்க வசதியாக இருக்கும்.

6-ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ள பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட, இந்த ஹூண்டாய் க்ரெட்டா, ஏராளமான மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

விலை;

விலை;

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி குறிப்பிடதக்க அளவில் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

வழக்கமான ட்ரிம்களை காட்டிலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை, சுமார் 1 லட்சம் ரூபாய் கூடுதலாக இருக்கும்.

பரவலாகி வரும் ஏடி;

பரவலாகி வரும் ஏடி;

முன்னதாக, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு எந்த விதமான போட்டியும் இல்லாமல் இருந்தது.

ஆனால், சமீபத்தில் தான் ரெனோ நிறுவனம், ஏஎம்டி வசதியுடன் கூடிய தங்களின் டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். ஏஎம்டி சிஸ்டம் விலை குறைவாக உள்ளது. இதனால், ரெனோ நிறுவனம் தங்கள் கார்களை நல்ல சவால்மிக்க விலைகளில் அறிமுகம் செய்ய வசதியாக உள்ளது.

பிற மாடல்களுக்கும் ஏடி;

பிற மாடல்களுக்கும் ஏடி;

க்ரெட்டா எஸ்யூவியை தவிர்த்து பிற மாடல்களுக்கும் இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம், தங்களின் பிரிமியம் ஹேட்ச்பேக்கான எலைட் ஐ20 மாடலுக்கும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி - சிறப்பு பார்வை

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

க்ரெட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai Motors India is in plans of offering Hyundai Creta Petrol Engine with automatic transmission soon. Hyundai India was the first to offer a compact SUV with diesel engine and automatic transmission. 1.6-litre petrol engine in Hyundai Creta would be mated to an optional automatic transmission. To more about Hyundai's latest plans, check here...
Story first published: Tuesday, April 5, 2016, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X