க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தியை கூட்ட ஹூண்டாய் நிறுவனம் திட்டம்

Written By:

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தியை கூட்ட ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 2015 ஜூலை மாதம் அறிமுகம் செய்யபட்டது. அறிமுகம் செய்யபட்டது முதல், க்ரெட்டா எஸ்யூவி தொடர்ந்து

சாதனைகள் படைத்து வருகிறது. க்ரெட்டா எஸ்யூவி தொடர்பாக இது வரை 5,00,000 விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

இதில் இருந்து, 8 மாதங்களுக்குள் 1,00,000 விசாரணைகள், புக்கிங்களாக மாற்றபட்டு சாதனை படைக்கபட்டுள்ளது. இதில் 56,000 வாடிக்கையாளர்களுக்கு க்ரெட்டா எஸ்யூவி டெலிவரி செய்யபட்டது.

தென் கொரியாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பான க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஃப்ரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் தான், மாருதி நிறுவனமும் தங்களின் பலேனோ ஹேட்ச்பேக் காரும், 1,00,000 புக்கிங்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தது.

hyundai-creta-suv-production-to-be-increased-by-30-percentage

"ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி அதிக அளவிலான காத்திருப்பு காலத்துடன் வருகிறது. இதனால், க்ரெட்டா எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை குறைக்க, இவற்றின் உற்பத்தி அதிக அளவில் கூட்டபட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு மாதத்திற்கு 13,000 க்ரெட்டா கார்கள் தயாரிக்கப்பட உள்ளது.

இதில் 10,000 கார்கள் இந்திய வாகன சந்தைகளுக்கும், 3,000 க்ரெட்டா கார்கள் சர்வதேச வாகன சந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளது" என ஹூண்டாய் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஇஓ ஒய்.கே. கூ தெரிவித்தார்.

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, மொத்தம் 3 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, பெட்ரோல் வகையில் 1.6 லிட்டர் பெட்ரோல் காம்மா ட்யூவல் விடிவிடி என்ற பெயரிலும், டீசல் வகையில் 1.4 லிட்டர் யூ2 சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் யூ2 சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின் தேர்வுகளிலும் வழங்கபடுகிறது.

English summary
Hyundai has announced that, it would increase production capacity for its compact SUV Creta by 30 percent. Presently, 10,000 Creta cars are made. With increase production, 13,000 Creta cars per month shall be produced. In this, 10,000 car would be sold in domestic market, and 3,000 cars are to be sold in overseas markets. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark