புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்தியாவில் ஆகஸ்ட் 23-ல் அறிமுகம்

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்தியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவின் முன்னோடி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. சில இடங்களில் டீலர்ஷிப்கள், இந்த புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் புக்கிங்கை ஏற்க துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிறது.

விரைவில் அறிமுகம் ஆக உள்ள புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 10 மாதங்களுக்கு முன்பு அலுவல் ரீதியாக நவம்பர் 2015-ல் நடைபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் இந்திய அறிமுகம், ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் அறிமுக தேதி உறுதி செய்யபட்ட நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஷோரூம்கள் இதற்கான புக்கிங்கை ஏற்க துவங்கிவிட்டனர்.

டெல்லியில் உள்ள ஷோரூம்கள் 25,000 ரூபாய் என்ற கட்டணத்திலும், மும்பையில் உள்ள ஷோரூம்கள் 50,000 ரூபாய் என்ற கட்டணத்திலும், புக்கிங்கை ஏற்று கொண்டு வருகின்றனர்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், மொத்தம் 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் வழங்க உள்ளது.

இதில், தற்போதைய 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் மட்டுமல்லாமல், வேறொரு புதிய பெட்ரோல் இஞ்ஜினும் சேர்க்கப்பட உள்ளது.

மேலும், டர்போசார்ஜர் உடைய மற்றொரு இஞ்ஜின், பின்னர் சேர்த்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.6 லிட்டர் இஞ்ஜின்;

1.6 லிட்டர் இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், தற்போதைய எலன்ட்ரா மாடலில் பொருத்தப்பட்டுள்ள ரீ-டியூனிங் செய்யபட்ட வடிவமாக உள்ளது.

தற்போதைய எலன்ட்ரா மாடலில் பொருத்தப்பட்டுள்ள இந்த 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் 126 பிஹெச்பியை வெளிப்படுத்துகிறது.

இதே 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், ரீ-டியூனிங் செய்யபட்ட புதிய எலன்ட்ரா செடானில் 134 பிஹெச்பியை வெளிப்படுத்தும்.

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

2.0 லிட்டர் இஞ்ஜின்;

2.0 லிட்டர் இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு, புதிய 2.0 லிட்டர் ஆட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படலாம். இது, 147 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த இஞ்ஜின், எரிபொருள் சிக்கனம் மிகுந்ததாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் போலவே, 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்டும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அல்லது 7-ஸ்பீட் டிசிடி ஆட்டோமேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகலாம்.

வேரியன்ட்;

வேரியன்ட்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், எந்த மாதிரியான வேரியன்ட் மற்றும் ட்ரிம்களில் வெளியாகும் என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் இல்லை.

போட்டி;

போட்டி;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், தற்போதைய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் டொயோட்டா கொரோல்லா ஆகிய மாடல்களுடன் போட்டி போடா வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், எக்கசக்கமான பிரிமியம் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், சுமார் 16 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி தள்ளுபடி;

அதிரடி தள்ளுபடி;

ஹூண்டாய் டீலர்கள், ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்டாக்குகளை கிளியர் செய்யும் நோக்கில், இதன் மீது 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கிராஷ் டெஸ்ட்டில் அதிக மதிப்பீடு பெற்ற 2017 ஹூண்டாய் எலன்ட்ரா - முழு விவரம்

இந்தியாவிற்கான ஹூண்டாய் எலன்ட்ராவின் இஞ்ஜின் விவரங்கள் வெளியாகியது

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

புதிய டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
New Hyundai Elantra Sedan is Set for Launch on August 23rd, 2016. Bookings for all-new Hyundai Elantra is started by dealerships in India. Dealers in Delhi have started to collect Rs. 25,000 for Bookings and in Mumbai dealers are charging Rs. 50,000 for Bookings of new Hyundai Elantra Sedan. New Elantra may be priced in range of Rs. 16 to 20 lakh ex-showroom. To know more, check here...
Story first published: Wednesday, August 10, 2016, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X