ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில்...

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சந்தைகளில் முன்னோடி;

சந்தைகளில் முன்னோடி;

இந்திய வாகன சந்தைகளில், தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்கும் கார்கள் தான் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளாக உள்ளன.

நம்பர் ஒன்றாவது இடத்தை, மாருதி நிறுவனமும், அதன் விரிவான போர்ட்ஃபோலியோவும் தான் இன்னும் தக்க வைத்து கொண்டுள்ளன.

சரியான போட்டி;

சரியான போட்டி;

பிரிமியம் ஹேட்ச்பேக் செகமென்ட்டில், ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலும், மாருதி பலேனோ மாடலும் கடுமையாக போட்டி போட்டு கொள்கின்றன.

ஹூண்டாயின் முயற்சி;

ஹூண்டாயின் முயற்சி;

மாருதி பலேனோ மாடலிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க, ஹூண்டாய் நிறுவனம் தங்களின் எலைட் ஐ20 மாடலுக்கு கூடுதலாக மதிப்பு கூட்ட உள்ளனர்.

எலைட் ஐ20 மாடலில், ஹூண்டாய் நிறுவனம், ஏடி எனப்படும் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை சேர்க்க உள்ளனர். ஹூண்டாய் நிறுவனம், தங்களின் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனை (டிசிடி), 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினர்.

ஏடி உடைய மாடல்கள்;

ஏடி உடைய மாடல்கள்;

தற்போதைய நிலையில், வெறும் ஃபோர்ட் ஃபிகோ மற்றும் ஃபோகஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ ஆகிய மாடல்கள் மட்டுமே டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன.

டாப் என்ட் வேரியன்ட்;

டாப் என்ட் வேரியன்ட்;

7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியானது ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் டாப் என் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

விலை பொருத்த வரை, 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், 8.5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ப்ரீ-புக்கிங்;

ப்ரீ-புக்கிங்;

ஹூண்டாய் டீலர்ஷிப்கள், ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் (ஏடி) மாடலின், ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங்கை விரைவில் துவக்கி விடுவார்கள் என தகவல்கள் வெளியாகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் (ஏடி) மாடல், இந்திய வாகன சந்தைகளில் இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் (ஏடி) மாடலின் அறிமுகம், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையை பெரும் அளவு கூட்ட வாய்ப்புகள் உள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கில், பெரிய அளவில் ஸ்டைல் அடிப்படையிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என தெரிகிறது.

இதன் ரியர் பகுதியில் மட்டும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை குறிக்கும் வகையிலான ஏடி பேட்ஜ் பொருத்தபடும்.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

ஹூண்டாய் நிறுவனம், அடுத்தப்படியாக, டுஸான் மற்றும் எலென்ட்ரா மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஓரங்கட்டேய்... வருகிறது 250எச்பி பவர் கொண்ட புதிய ஐ20 என் கார்!

எலைட் ஐ20 தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai Motors is planning to launch their Hyundai Elite i20 hatchback with 7-Speed Auto Transmission In India. Elite i20 and Baleno models compete against each other in premium hatchback segment. In order to control Rival's domination, Hyundai Elite i20 will be offered with more value. Elite i20 hatchback will include an all-new 7-speed Automatic Transmission (AT). To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X