ஹூண்டாய் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் சொகுசு செடானை அறிமுகம் செய்ய திட்டம்

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் சொகுசு (லக்சுரி) செடானை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் சொகுசு கார் பிராண்டான ஜெனிசிஸ் கீழ், முழுவதுமான புதிய எலக்ட்ரிக் சொகுசு (லக்சுரி) செடானை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

hyundai-genesis-to-build-fully-electric-luxury-sedan-soon

தற்போதைய நிலையில், ஜெனிசிஸ் பிராண்டின் கீழ், வழக்கமான பெட்ரோல் இஞ்ஜின் உபயோகிக்கும் ஜி90 மற்றும் ஜி80 செடான்கள் வழங்கபட்டு வருகிறது. ஜி80 செடானின் டீசல் வேரியன்ட் அடுத்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலக்ட்ரிக் சொகுசு செடான் அறிமுகம் செய்யபட்டால், ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் கிடைக்கும் கார்களின் தேர்வுகள் இன்னும் விரிவானதாக ஆகிவிடும்.

லம்போர்கினியின் முன்னாள் டைரக்டர் மற்றும் ஜெனிசிஸ் பிராண்டின் தற்போதைய வைஸ் பிரசிடென்ட் மேன்ஃப்ரெட் ஃபிட்ஸ்ஜெரால்ட், 2016 பூசான் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில், ஜி80 செடானின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, இந்த புதிய எலக்ட்ரிக் சொகுசு (லக்சுரி) செடான் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

"ஜெனிசிஸ் பிராண்டின் கீழ், மாற்று (ஆல்டர்நேடிவ்) சக்தி மூலம் இயங்கும் கார்களையும் வழங்க உள்ளோம். இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களும் எங்கள் திட்டத்தில் நிச்சயம் உள்ளது. முழுமையான எலக்ட்ரிக் கார்கள் தான், ஆட்டோமொபைல் துரையின் வருங்காலமாக இருக்கும்" என மேன்ஃப்ரெட் ஃபிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்தார்.

ஜெனிசிஸ் நிறுவனம், தாங்கள் வழங்கும் ஜி80 செடான் காரை, 2016 பூசான் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில், அறிமுகம் செய்தனர். இந்த கார், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ், ஆடி ஏ6 மற்றும் பிஎம்டபுள்யூ 5 சீரிஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Most Read Articles
English summary
South Korean carmakers, Hyundai Motor Company is planning to launch fully-electric luxury car bearing logo of its luxury marque, Genesis. At present, Genesis line features G90 and G80 sedans, which uses conventional petrol engines. The introduction of this all Electric Luxury Sedan will further diversify the lineup of its Genesis luxury brand. To know more, check here...
Story first published: Monday, June 6, 2016, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X