ஹூண்டாய் ஐ10 காரின் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன?

Written By:

இந்தியாவில் ஹூண்டாய் வர்த்தகத்தை நிலைநாட்டிய மாடல்களில் சான்ட்ரோவுக்கு அடுத்து ஐ10 கார் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியது. டிசைன், தரம், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் 1.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல்தான் ஐ10. ஆனால், பிற ஹூண்டாய் கார்கள் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்துக்கு மேம்படுத்தப்பட்ட நிலையில், ஐ10 காருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

விற்பனை பங்களிப்பு

ஏனெனில், கிராண்ட் ஐ10 கார் சிறப்பான விற்பனை பங்களிப்பை வழங்கி வருவதே இதற்கு காரணமாக அமைந்தது. மறுபக்கத்தில் புதிய கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வந்ததற்கு பின்னர், சாதாரண ஐ10 காரின் விற்பனை சரிவை நோக்கி சென்றது.

புதிய மாடல்களுக்கு வரவேற்பு

கடந்த சில மாதங்களாக விற்பனை மாதத்திற்கு 1,500 கார்கள் என்ற அளவிற்கு சரிந்தது. தற்சமயம் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, க்ரெட்டா போன்ற புதிய மாடல்களுக்கு அதிக முன்பதிவு இருக்கின்றன. மேலும், டூஸான் உள்ளிட்ட மாடல்களின் வருகையும் உற்பத்தி பிரிவில் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உண்டானது.

உற்பத்தி நிறுத்தம்

இதனால், அந்த மாடலை தொடர்ந்து உற்பத்தி செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது என்று முடிவு செய்து சில நாட்களுக்கு முன் சென்னை அருகே உள்ள ஆலையில் ஐ10 காரின் உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது ஹூண்டாய் கார் நிறுவனம்.

முக்கியத்துவம்

அதிக டிமான்ட் இருக்கும் கார்களை கூடுதலாக உற்பத்தி செய்யும் விதத்தில் புதிய கார்களின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக, ஐ10 காருக்கு விடை கொடுத்துவிட்டது ஹூண்டாய் நிறுவனம்.

சிறந்த கார்

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஐ10 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் ஐ10 காரின் உற்பத்தி பட்ஜெட் கார் வாங்க விரும்புவோருக்கு சிறிய ஏமாற்றம் தரும் விஷயம்தான்.

புதிய மாடல்

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஐ10 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் ஐ10 காரின் உற்பத்தி பட்ஜெட் கார் வாங்க விரும்புவோருக்கு சிறிய ஏமாற்றம் தரும் விஷயம்தான்.

Source: Team BHP

English summary
Hyundai India has stopped the production of i10 hatchback in India to make way for the new models.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark