ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவங்கியது

Written By:

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் என்ற பெயரில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தும் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவங்கியுள்ளது. பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், அவ்வப்போது சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றனர். அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனமும் தற்போது சர்வீஸ் முகாம்களை நடத்துகிறது.

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் பற்றிய கூடுதல் தகவல்களை, இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக்...

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக், 22-வது சர்வீஸ் முகாம் ஆகும். இந்த சர்வீஸ் முகாம், இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையங்களில் நடத்தப்படும். தற்போதைய ஹூண்டாய் வாடிக்கையாளர்களும், புதிய ஹூண்டாய் வாடிக்கையாளர்களும் இந்த சர்வீஸ் முகாம்களில் பங்கேற்று தங்களின் கார்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

சர்வீஸ் முகாம் காலம்;

சர்வீஸ் முகாம் காலம்;

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் என்ற பெயரிலான இந்த சர்வீஸ் முகாம், செப்டம்பர் 17-ஆம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவில் கிழக்கு பகுதிகளில் இந்த சர்வீஸ் முகாம் செப்டம்பர் 17-ஆம் தேதி துவங்கி 28-ஆம் தேதி வரை நடத்தப்படும். சர்வோ ஆயில் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம் தான் இந்த சர்வீஸ் முகாமின் முக்கியமான ஸ்பான்ஸராக உள்ளது.

செக்கப்;

செக்கப்;

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் முகாம்களின் போது, வாடிக்கையாளர்களின் கார்களுக்கு 90 பாயின்ட் செக்கப் நடத்தப்படுகிறது. இஞ்ஜின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக்கல் சிஸ்டம், ஏசி, அண்டர் பாடி (அடி பாகங்கள்) மற்றும் பாடி பேனல்கள் ஆகியவற்றின் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்பேர் பார்ட்ஸ் (உதிரி பாகங்கள்), லேபர் சார்ஜ், (லேபர் கட்டணம்) மற்றும் வேல்யூ ஆட்டட் சர்வீஸ் எனப்படும் மதிப்பு கூட்டப்பட சேவைகள் ஆகியவற்றின் மீது ஈர்க்கும் வகையிலான தள்ளுபடிகள் வழங்கப்படும்.

அதிர்ஷ்ட குலுக்கல்;

அதிர்ஷ்ட குலுக்கல்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 22-வது சர்வீஸ் முகாம்களின் போது, தினசரி அதிர்ஷ்ட குலுக்கல்களும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, சுமார் 100-க்கும் மேற்பட்ட இலவச எக்ஸ்டண்டட் வாரண்டிகள் வழங்கப்படும். மேலும், ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மூலம் வெற்றியாளர்களுக்கு தினம்தோறும் 10 கிரிக்கெட் கிட்கள் வழங்கப்படும்.

சிறப்பு சலுகைகள்;

சிறப்பு சலுகைகள்;

பற்றுமாறா ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்பேஷல் சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்படும். நான்கு வருடங்களுக்கும் மேலாக ஹூண்டாய் கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கவணிப்பு அளிக்கப்படும்.

சர்வீஸ் புக்கிங்;

சர்வீஸ் புக்கிங்;

ஹூண்டாய் கேர் மொபைல் ஆப் (Hyundai Care mobile app) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், தங்களின் ஹூண்டாய் கார்களுக்கான சர்வீஸ், புக்கிங் செய்து கொள்ளலாம்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Motors India has announced its 22nd Free Car Care Clinic. This service camp named as Hyundai Free Car Care Clinic will be held at Hyundai service outlets pan India. This service camp will be organised throughout India from September 17 to 26. Hyundai will extend its Free Car Care Clinic from September 17 to 28 in Eastern parts of India. To know more, check here...
Story first published: Saturday, September 17, 2016, 18:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos