ஹூண்டாய் கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தீபாவளி ஆஃபர்- விபரம்!

Written By:

தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து கார் நிறுவனங்களும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இப்போது இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த காருக்கு அதிகபட்சமாக எவ்வளவு சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது என்பதை தொடர்ந்து காணலாம்.

மாருதி ஆல்ட்டோ மற்றும் ரெனோ க்விட் கார்களின் நெருக்கடியால் ஹூண்டாய் இயான் விற்பனையில் மந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, ஹூண்டாய் இயான் காருக்கு அதிகபட்சமாக ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று, ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் கார் மாடலான ஹூண்டாய் ஐ10 காருக்கு ரூ.53,000 மதிப்பிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு ரூ.10,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களுக்கும் இந்த சேமிப்புச் சலுகைகள் பொருந்தும்.

ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.47,000 மதிப்பிலான சேமிப்புச் சலுகைகளும், டீசல் மாடலுக்கு ரூ.57,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெர்னா மற்றும் சான்டா ஃபீ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

எக்ஸ்சேஞ்ச் போனஸ், விலையில் நேரடி தள்ளுபடி, ஆக்சஸெரீகளில் தள்ளுபடி என சேமிப்பை புதிய ஹூண்டாய் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

வரும் அக்டோபர் 28ந் தேதி வரை புதிய ஹூண்டாய் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். மேலும், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கிரிக்கெட் கிட் பரிசாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்த சேமிப்புச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்புள்ளது. அருகாமையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்களை தொடர்பு கொண்டு, சேமிப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ளலாம். அதன்பிறகு, டீலருக்கு நேரில் சென்று காரை முன்பதிவு செய்வது நல்லது.

English summary
Hyundai Motors is offering customers a maximum benefit worth Rs. 2 lakhs this Diwali. All the offers and benefits are valid only until October 28, 2016, pan India. Read in Tamil.
Story first published: Monday, October 24, 2016, 14:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos