பட்ஜெட் எதிரொலி: ஹூண்டாய் கார்களின் விலை எக்கச்சக்கமாக உயருகிறது

By Ravichandran

பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, அனைத்து கார்களின் விலையையும் கணிசமாக உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

சமீபத்தில் தான், டாடா மோட்டார்ஸ் தங்கள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் வழங்கப்படும் அனைத்து மாடல்களின் விலைகளையும் உயர்த்தியது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் சார்பாக, இந்தியாவில் விற்கபடும் அனைத்து மாடல்ககளின் விலைகளையும் உயர்த்த உள்ளதாக அறிவித்தது.

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலைகளையும் 30,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இயான் முதல் சாண்டா பீ வரை அனைத்து மாடல்களும் இந்த விலைஉயர்வில் அடங்குகிறது. இந்த விலைஉயர்வு, இந்திய வாகன சந்தைகளில் ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளின் ஒட்டுமொத்த விற்பனையை பாதிக்க உள்ளது.

ஹூண்டாய் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் செய்யபடும் இந்த விலைஉயர்வுக்கு காரணம், மத்திய அரசு மூலம் விதிக்கபடும் "இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ்" என்ற வரி தான் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான 2016 யூனியன் பட்ஜெட்டின் அடிப்படையில், ஆட்டோமொபைல்களின் மீது வெவ்வேறு நிலைகளில் வேறுபடும் வரிகள் விதிக்கபடுகிறது.

hyundai-india-plans-price-hike-upto-rs-80000-on-all-their-car-models

மேலும், சர்வதேச பொருளாதாரங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும், கார்கள் தயாரிக்க தேவைப்படும் உள்ளீடுகளின் விலைஉயர்வும், ஹூண்டாய் நிறுவனம் செய்துள்ள விலையேற்றங்களை நியாயபடுத்த வசதியாக அமைந்துள்ளது.

இனிமேல், வெளியாகும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகளும், அறிமுகம் செய்யபடுவதற்கு முன்பே விலையேற்றத்திற்கு உட்படுத்தபட்ட பின்னரே அறிமுகம் செய்யபட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் நிறுவனம் ஏராளமான புதிய மற்றும் விரைவில் வெளியாக உள்ள மாடல்களை அறிமுகம் செய்தது.

இவற்றில், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விரைவில் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும். இந்த நிலையில், சொகுசு கார்களின் மீதான வரி கூட்டபட்டுள்ளதால், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் விலைகள் எதிர்பார்த்ததை விட விலை உயர்ந்ததாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motors India is in plans on increasing prices of all its models sold in India. Korean-based automobile giant plans on increasing price of its models from Rs. 30,000 to Rs. 80,000 approximately. Major reason for this price hike by Hyundai and other manufacturers is because of new 'infrastructure cess', levied by Central Government.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X