ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எஸ்யூவி-களை உருவாக்குவதில் ஹூண்டாய் முனைப்பு

Written By:

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் அடிப்படையாக கொண்டு இயங்கும் எஸ்யூவி-களை உருவாக்குவதில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.

ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கும் ஃப்யூவல் செல் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போக்குவரத்தின் வருங்காலம்:

போக்குவரத்தின் வருங்காலம்:

உலகின் பல்வேறு நாடுகள் காற்று மாசுப்பாடு பிரச்னையை முன்நிறுத்தி வருகின்றன. மேலும், இதற்கான உடனடி தீர்வுகளை எதிர் நோக்கியுள்ளன. இதற்கான தீர்வாக, எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் உடனடியாக கிடைக்கிறது.

ஆனால், போக்குவரத்தின் வருங்காலமாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களே திகழ உள்ளன. இதனால், ஹூண்டாய் மோட்டார்ஸ் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ஃப்யூவல் செல் எஸ்யூவி மாடலை உருவாக்குவதில் முனைப்புடன் உள்ளது.

முதல் ஃப்யூவல் செல் வாகனம்;

முதல் ஃப்யூவல் செல் வாகனம்;

சர்வதேச வாகன சந்தைகளுக்கென, வெகுஜன பிரயோகத்திற்காக முதன் முதலாக தயாரிக்கபட்ட ஃப்யூவல் செல் வாகனம், ஹூண்டாய் ஐஎக்ஸ்35 கார் ஆகும். இதன் அறிமுகத்தின் போது, சர்வதேச சந்தைகளுக்கு ஃப்யூவல் செல் வாகனங்களை சுலபமாக வழங்குவது என இஞ்ஜினியர்கள் நோக்கம் கொண்டிருந்தனர். வளர்ந்து வரும் சந்தைகளுக்காக, புதிய முழு அளவுடைய எஸ்யூவி ஒன்று தற்போது உருவாக்கபட்டு வருகின்றது.

2020-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்?

2020-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்?

முன்னதாக, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் மூலம், சொந்தமான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் காரை 2020-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இந்த புதிய ஃப்யூவல் செல் எஸ்யூவி-யை 2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்த புதிய ஃப்யூவல் செல் எஸ்யூவி, டொயோட்டா நிறுவனத்தின் புதிய மிராய் ஃப்யூவல் செல் காருடன் போட்டி போட நேரிடும் என தெரிகிறது.

அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்கள்;

அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்கள்;

அதிக ரேஞ்ச் மற்றும் உயர்ந்த அளவிலான வேகம் கொண்ட ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்களை உருவாக்குவதில், இஞ்ஜினியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். முழு சார்ஜிற்கு பின், சுமார் 800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வகையிலான வாகனங்களை திறன்மிக்கதாக மாற்ற ஹூண்டாய் டெக்னீஷியன்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். புதிய ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எஸ்யூவி, மணிக்கு 165 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்க உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

டிசைன் மொழி;

டிசைன் மொழி;

டுஸான் காரை அடிப்படையாக கொண்டு தான், முதல் ஐஎக்ஸ்35 ஃப்யூவல் செல் காரை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்தது. தொடர்ந்து, இந்த டிசைன் மொழியையே அடிப்படையாக கொண்டு, மேலும் பல ஃப்யூவல் செல் கார்களை உருவாக்க உள்ளனர். ஆனால், இந்த புதிய ஃப்யூவல் செல் எஸ்யூவி எப்போது வெளியிடப்படலாம் என்று எந்த தெளிவான தகவல்களும் இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லண்டனில் களமிறங்கும் ஹூண்டாய் ஹைட்ரஜன் கார்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Hyundai Motors firm is involved in the making of an all-new hydrogen-powered fuel cell SUV model. Many countries across the World are citing air-pollution issues and they are searching for immediate alternatives. At present, Electric and hybrid vehicles are available readily. But, the future of Transport is expected to be hydrogen powered vehicles.
Story first published: Monday, January 4, 2016, 10:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark