ஹூண்டாய் சான்ட்ரோ காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர முயற்சி

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் ஹூண்டாய் சான்ட்ரோ காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து மிக தீவிரமாக திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் குறித்த கூடுதல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சான்ட்ரோ...

சான்ட்ரோ...

சான்ட்ரோ கார், ஹூண்டாய் நிறுவனம் வழங்கிய வாகனங்களில் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக இருந்தது.

ஹூண்டாய் சான்ட்ரோ, ஒரிஜினல் டால் பாய் டிசைன் அடிப்படையில் வடிவமைக்கபட்ட கார் ஆகும்.

மறு பிரவேசம்;

மறு பிரவேசம்;

எகனாமிக் டைம்ஸ் இதழ் வெளிட்ட செய்திகள் படி, ஹூண்டாய் சான்ட்ரோ மாடல், தென் கொரியாவில் உருவாக்க நிலையில் உள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரை நாம் இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் காணலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ கார் தொடர்பாக மீண்டும் மீண்டும் கிடைத்து வந்த என்குவயரிகளின் காரணமாக ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரை இந்தியாவிற்குள் மறு பிரவேசம் செய்ய முடிவு செய்துள்ளது.

சான்ட்ரோ காருக்கு இந்தியாவில் உள்ள ஆதரவை, ஹூண்டாய் நிறுவனம் கூர்ந்து கவனித்து வருகிறது. எனினும், சான்ட்ரோவை இந்தியாவிற்குள் மறு பிரவேசம் செய்யும் திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகாமல் உள்ளது.

வேடிக்கை பார்க்குமா மாருதி?

வேடிக்கை பார்க்குமா மாருதி?

இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி வெரும் கைகள் கட்டி கொண்டு வேடிக்கை பார்க்குமா?

மாருதி நிறுவனமும், டால் பாய் டிசைனை தங்கள் தயாரிப்புகளில் ஏற்க முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ மாடலை எதிர்கொள்ள, மாருதி நிறுவனமும் டால் பாய் டிசைனில் ஆன ஆல்ட்டோ காரை உருவாக்குவது குறித்த திட்டங்கள் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சான்ட்ரோவின் அறிமுகம்;

சான்ட்ரோவின் அறிமுகம்;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கி வந்த சான்ட்ரோ, 1997-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இதன் காலகட்டத்தில், ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் மிக முக்கியமான போட்டி மாடலான மாருதி ஸென் மாடலை எதிர் கொள்ள, புதிய தொழில்நுட்பம் கொண்ட எம்பிஎஃப்ஐ இஞ்ஜினுடனும், பவர் ஸ்டியரிங் உடனும் சான்ட்ரோ வழங்கபட்டது.

ஹூண்டாய் சான்ட்ரோ, முதலில் 1.0 லிட்டர் இஞ்ஜினுடன் தான் வழங்கபட்டது. பின்னர், இது 1.1 லிட்டர் இஞ்ஜினுடன் வழங்கபட்டது.

எளிமையான மாடல்;

எளிமையான மாடல்;

ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின், இங்க்ரெஸ் (ingress) மற்றும் எக்ரெஸ் (egress) என்ற முறையிலான இந்த கார் இயக்கம், அனைவருக்கும் மிக எளிமையானதாக இருந்தது.

இதனால், வாடிக்கையாளர்கள் இந்த சான்ட்ரோவை எந்த விதமான சிக்கல்களும் இன்றி இயக்கி மகிழ்ந்தனர்.

அபார விற்பனை;

அபார விற்பனை;

ஹூண்டாய் சான்ட்ரோ மாடல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளபட்டது.

அது வரை, இதன் ஹூண்டாய் சான்ட்ரோ மாடலில், ஒவ்வொரு மாதமும் சுமார் 2,000 முதல் 2,500 கார்கள் மிக சுலபமாக விற்கபட்டு வந்தது என்பது குறிப்பிடதக்கது.

ஐ10;

ஐ10;

தற்போது, ஹூண்டாய் வழங்கும் ஐ10, சான்ட்ரோ பெற்று வந்த ஆதரவை பெற்று வருகிறது.

சிறந்த தேர்வு;

சிறந்த தேர்வு;

பல்வேறு டிரைவிங் ஸ்கூல்கள் எனப்படும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் தற்போதும் கூட கார் ஓட்டுவதற்கு பயிற்சி வழங்க ஹூண்டாய் சான்ட்ரோ சிறந்த தேர்வாக உள்ளது.

கார் ஓட்ட கற்று கொள்வதற்கு, ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்டாண்டர்ட் காராக விளங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விடைபெறுகிறது ஹூண்டாய் சான்ட்ரோ... அடுத்த மாதம் உற்பத்தி நிறுத்தப்படுகிறது!

சான்ட்ரோ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai Motor India is seriously planning a comeback for Santro - the original Tall Boy car. Santro was designed on the basis of Tall Boy Design. Hyundai Santro was launched back in 1997. Hyundai Santro was selling in around 2,000 to 2,500 units every month, until it was phased out two years back. To know more about Hyundai Santro re-entry, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X