புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் 400-க்கும் கூடுதலான புக்கிங் குவிப்பு

Written By:

ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய எலன்ட்ரா செடான் இது வரை 400-க்கும் கூடுதலான புக்கிங்களை குவித்துள்ளது. ஹூண்டாய் எலன்ட்ரா, எக்சிகியூட்டிவ் பிரிமியம் செடான் ஆகும்.

மிக அதிகமான போட்டி நிறைந்த எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் மார்கெட்டில், ஹூண்டாய் எலன்ட்ரா போன்ற எக்சிகியூட்டிவ் பிரிமியம் செடானுக்கு கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியம் அளிக்கிறது. ஹூண்டாய் எலன்ட்ராவுக்கு கிடைத்து வரும் வரவேற்பு தொடர்புடைய கூடுதல் விவரங்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹூண்டாய் எலன்ட்ரா செடான் சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தான் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மட்டுமே, சுமார் 405 புக்கிங் குவிந்துள்ளது. மேலும், 7,817 விசாரணைகள் பதிவாகியுள்ளது.

பாரம்பரியம்;

பாரம்பரியம்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு, மிக நீண்ட பாரம்பரியம் உள்ளது. இது முன்னதாக, 1990-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரை, கடந்த 5 தலைமுறை எலன்ட்ரா செடாங்களும் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

டிசைன்;

டிசைன்;

புதிய எலன்ட்ரா செடான், ஹூண்டாய் நிறுவனத்தின் வழக்கமான ஃப்ளூயிடிக் டிசைன் சித்தாந்தம் உபயோகப்படுத்தப்படவில்லை. ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் தோற்றம் மெல்லியதாகவும், கூர்மையானதாகவும் உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் வெர்னாவில் உள்ள 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

செயல்திறன், மைலேஜ்;

செயல்திறன், மைலேஜ்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 150 பிஹெச்பியும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இது ஒரு லிட்டருக்கு 14.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் 126 பிஹெச்பியும், 265 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் இஞ்ஜின்கள், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் தேர்வுகளுடன் கிடைக்கும்.

மோட்கள்;

மோட்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், எகோ மற்றும் ஸ்போர்ட் என 2 டிரைவிங் மோட்களுடன் கிடைக்கிறது.

விலை;

விலை;

தற்போதைய நிலையில், அறிமுக சலுகைகளின் அடிப்படையில், புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் பெட்ரோல் வேரியன்ட் 12.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் வேரியன்ட் 14.79 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் கிடைக்கும்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai’s New Elantra has gathered over 405 Bookings. New Hyundai Elantra was launched on August 23, 2016. Within some days, this executive premium sedan received over 405 bookings and 7,817 enquiries within eight days of its launch. New Hyundai Elantra features two drive modes- Eco and Sport. To know more about success of New Hyundai Elantra, check here...
Story first published: Sunday, September 4, 2016, 7:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos